பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய தத்துவம்

ஆர்கலி


51.பரகாயப் பிரவேசம் 52.அதிரிச்சயம் 53.இந்திரசாலம் 54.மகேந்திரசாலம் 55.அக்கினித்தம்பம் 56.ஆகாய சமனம் 57.சலத்தம்பம் 58.வாயுத்தம்பம் 59.திட்டித்தம்பம் 60.வாக்குத்தம்பம் 61.சிக்கிலத்தம்பம் 62.கன்னத்தம்பம் 63.கட்கத்தம்பம் 64.அவத்தைப் பிரயோகம்.

ஆயதத்துவம்- ஆன தத்துவம் எ-டு ஆய தத்துவம் சீவர்க்கு வந்திடும் பிரேர காண்டம் (சிசிசுப 160),

ஆயம் - கூட்டம், ஆதாயம், உலகம்

ஆயவர்- அத்தகையவர். அவர்களாவன, தாயர்,மனைவியர்,தாதியர்,தவ்வையர்,ஆக நால்வகை மாதர்.

ஆயவன்- இறைவன்,முதல்வன்.

ஆய் -ஆராய்க,போல,அழகு அழுக்கு, மலம்.

ஆய்ஆன்மா -ஆராய்கின்ற உயிர்

ஆய் இழை - நுணுகிய நூல்.வேதமும் ஆகமமும்

ஆய்தல்-துணிதல்,ஆராய்தல்

ஆய்ந்தார் முன் செய்வினை - இறைவன் தன்னைச் சார்ந்தோர் சாராதோர் ஆகிய இரு திறத் தார் மாட்டும் நுணுகிக் கூடுவதாகிய பிராரத்த வினையும் அவ்வாறே இருவேறு வகைப்படுமாறு செய்தருளுவான்.தன்னைச் சார்ந்தவர்களுக்குப் பிராரத்த வினை எறும்பு கடித்தால் போல உடலூழாய் கழியுமாறும் தன்னைச் சாராதவர்க்குக் கருந்தேள் கடித்தது போல உயிரூழாய்க் கழியுமாறும் இறைவன் செய்தருளுவான்

"ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு" (சிபோ பா64)

ஆய்பரம்-அழகிய கடவுள்

ஆயாது-அறியாது.

ஆயிட்டு-ஆகையால்

ஆயில்-1மலத்தில் எ.டு ஊன் திரள் திரள் போன்றது ஆயில் தோன்றி (இ4) 2. உண்டாகில்

ஆயுர் வேதம் - உபவேதம் 4இல் ஒன்று.

' ஆயுள் வேதம் - எல்லாம் கடைப் பிடிப்பதற்குச் சாதகமான உடலை நோயின்றி நிலை பெறச் செய்வது.

ஆரணம் - வேதம்

ஆரண நூல் - வேதநூல்.

ஆரணன் - 'பிரமன்.

ஆரம்பவாதம்- அசற்கரியவாதம் ஒ. சற்காரிய வாதம்

ஆரத்தி - தீப ஆராதனை

ஆரம் - பூமாலை.

ஆரவாரம் - வெற்றொலி.

ஆரழல் - மிகுவெப்பம் எடு தூமம் ஆரழல் ஆங்கி சீதம் (சிசி பப 62).

ஆரறிவு - நிறைந்த அறிவு. ஒ.

ஆறறிவு.

ஆர்ஆர் - யார் யார்.

ஆர் அறிவார் - யார் அறிவார்.

ஆர்கலி - இரையுங்கடல் எ-டு ஆசைதனில் பட்டு இன்ப ஆர்கலிக்குள் (நெவிது 105)

40