பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு வகைப்படும்

ஆன்ம அவத்தை



ஆறு வகைப்படும் - 1. கார் - ஆவணி, புரட்டாசி, 2. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை 3. முன்பனி - மார்கழி, தை 4. பின்பனி - மாசி, பங்குனி 5. இளவேனில் - சித்திரை, வைகாசி 6. முதுவேனில் - ஆனி, ஆடி.

ஆனந்த சத்தி - பரம சிவன் ஆற்றல்.

ஆனந்தம் - இன்பம்.

ஆனந்தமயகோசம் - உடம்பு 5 இல் ஒன்று.

ஆனந்தநிருத்தனம் - பேரின்பக்கூத்து.

ஆனந்தரீயம் - இவை ஆய்ந்த பின், இது கேட்பதற்குரியது என்னும் யாப்பு.

ஆனந்த வாரிதி - இன்பக்கடல்

ஆனந்தான்மாவாதி - பா. ஆன்மக் கொள்கைகள்.

ஆன் - பசு

ஆன்ம அவத்தை - ஆன்மா அவத்தைக்கு உட்படுவது. அவ்வவத்தை இருவகை காரண அவத்தை - இது மூல அவத்தை அல்லது முத்திற அவத்தை. இதிலுள்ள மூன்று நிலைகள்

1. கேவல அவத்தை: ஆன்மா சர்வ சங்காரத்தில் சுத்த மாயா கரணத்தில் ஒடுங்கிப் படைப்புக்காலம் அளவும் ஆணவ மலத்தால் மறைப்புண்டு கிடக்கும். இப்பொழுது கலையாதி தத்துவங்களுடன் கூடாமல், அறிவும் செயலும் இழந்து ஆன்மா நிற்கும் நிலை இது.

2. சகல அவத்தை: படைப்பு தொடங்கிச் சர்வ சங்கார கால அளவும் ஆன்மா 36 தத்துவங்களுடன் கூடி, 84 இலட்சம் உயிர் இனங்களில் பிறந்து இறந்து உழலும் நிலை இது.

3. சுத்த அவத்தை: அவ்வாறு பிறந்து இறந்து உழலும் நிலையில் இருவினையொப்பு, மல பரிபாகம், சத்திநிபாதம் ஆகிய முந்நிகழ்ச்சிகளை அடைந்து ஆன்மா திருவருளுடன் கூடி இருக்கும் நிலை இது.

காரிய அவத்தை

1. சகலத்தில் கேவலம்: கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூல அவத்தைகள் ஒவ்வொன்றிலும் சாக்கிரம், சொப்பனம் சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்து அவத்தைகளையும் ஆன்மா அடையும். இந்த முத்திற ஐந்து அவத்தைகளுள் புருவ நடுமுதல் மூலாதாரம் வரையிலும் ஆன்மா தங்கிச் சாக்கிரம் முதல் துரியாதீதம் வரையுள்ள ஐந்து அவத்தைகளைப் பொருந்தும் நிலையே சகலத்தில் கேவலம். இதற்குக் கீழாலவத்தை அல்லது கீழ் நோக்கு அவத்தை என்று பெயர்.

2. சகலத்திற் சகலம்: புருவ நடுவி லிருந்து சாக்கிரத்தில் சாக்கிரம் முதல் சாக்கிரத்தில் துரியா தீதம் வரை ஆன்மா அடையும் நிலை இது. இதற்கு மத்தியாலவத்தை அல்லது மைய நோக்கு அவத்தை என்று பெயர்.

3. சகலத்தில் சுத்தம்: நின்மல சாக்கிரம் முதல்நின்மலதுரியா தீதம் வரையிலுள்ள ஐந்து அவத்தைகளை ஆன்மா அடையும் நிலை இது. இது மேலாலவத்தை அல்லது மேல் நோக்கு அவத்தை எனப்படும்.

43

4