பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருத்திராக்கம்

உரையிற்கோடல்


 தெழுத்தையும் திரு உருத்திரத்தையும் சேபித்தும் வந்தவர் . இலிங்க வழிபாடு (63)

உருத்திராக்கம் - உருத்திராக்க மணி அல்லது மாலை. சிவச்சின்னம்.

உருமேனி - இறைவன் மூன்று மேனிகளால் ஒன்று. உயிர்கள் தம் கண்ணால் காணும்படி இறைவன் எடுக்கும் சகள வடிவம். பா. திருமேனி,

உருவகம்-உவமானத்தை உவமேயமாகக் கூறுதல்.

உருவத்திருமேனி-மகேசுவரன், உருத்திரன், மால், அயன்.

உருவம் ஆதி ஐந்து - உருவக் கந்தம்,வேதனைக் கந்தம், செஞ் ஞானக் கந்தம், விஞ்ஞானக் கந்தம், வாசனைக் கந்தம்

உருவப் பிரபஞ்சம் - அசேதனப் பிரபஞ்சம்.

உருவன் - திருமேனியன்.

உருவாதிஐந்து- உரு ஐந்து எடு உருவாதி ஐந்தும் கூடி வருபவன் (சிசி பப70)

உருவாதி கந்தங்கள் - இவை ஐந்து. பா. கந்தங்கள்

உருவாதிசதுர்விதம்-உருவாதி நான்கு.

உரை - 1. ஆகமம் 2 கருத்துரை, பொழிப்புரைமுதலியன3.கூறுவது 4. அளவை 5. சத்தம் (பொருள்).

உரை - இது பிரமாணம் நான்கைக் குறிக்கும். அவை பிரமாணம், இறை பிரமேயம், நீபிரமாதா, நின் பிரமிதி.

உரை இலக்கணம் - பதம், பதப்பொருள், உதாரணம், வினா, விடை என்னும் ஐந்து.

உரைக்காணல்-விளங்க அறிதல்

உரைச்செய்யுள் - உரையாகிய செய்யுள்.

உரைப்பர் வேதம் - வேதம் உரைப்பவர். தேவர், முனிவர், சித்தர், முதலியவர்.

உரைபிரமாணம் - நூல் பிரமாணம் -

உரையளவை - ஆகமப்பிரமாணம்.இது மூன்று வகை 1. உபதேச உரையளவை: ஞான காண்டம் பற்றி ஒப்பிலா இறைவனின் இயல்புகளைத் தான் உணருமாறும் பிறர் உணருமாறும் அறிவுறுத்துவது. 2. மாத்திரை உரையளவை: உபாசனா காண்டம் பற்றி மனத்தை அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை மாத்திரம் ஆகும். 3. தந்திர உரையளவை: தரும காண்டம் பற்றிப் பின்னோடு முன் மாறுபாடுகளின்றுப் பேணுவது.

உரையா - தேயாது. எ-டு அருவம் உரையாது.

உரையால் அனுமானம் - வேறு பெயர். ஆகமலிங்கா அனுமானம், அனுபவப் பிரமாணம், இப்போது ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளால் விளைவு என்று ஆகமங்களில் கூறுவதைக் கொண்டு, இப்பிறவியில் செய்யும் நல் வினைதீவினைகளும் வருகின்ற பிறவிகளில் இன்பதுன்பங்களை நிகழ்விக்கும் என்னும் கூற்று. இதனைச் சிவஞான முனிவர் உரையனுமானம் என்பர். உரையிற்கோடல்-மூலத்தில் இல்லாத இனமான சொல்லை உரையிற் கொள்ளுதல். எ-டு

65