பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழ்

எடுத்துக்காட்டு உவமை அணி


 ஊழ் - விதி, ஊழிற்பெருவலியாவுள' என்பது வள்ளுவர் வாக்கு.

ஊழ்வகை - விதிவகை மூன்று : பிராரத்துவம் (நுகர்வினை), சஞ்சிதம் (கிடைவினை), ஆகாமியம் (செய்வினை). நான்கு : ஆகூழ் (ஆதல்), போகூழ் (போதல்), இழவூழ் (இழத்தல்), ஆகலூழ் (ஆக்கல்), பின்னது திருவள்ளுவர் வகைப்பாடு.

ஊறு - பரிசம், உறுத்துணர்ச்சி ஐம்புலன்களின் ஒன்று.

ஊனகம் - ஊடல், எ-டு ஊனகத்தே உன்னுமிது (திப 49)

ஊனக்கண் - பசு அறிவு, குறையறிவு, எ-டு, ஊனக்கண் பாசம் உணராப் பதியை (சிவோ நூபா 9)

ஊனக் கூத்து - பிறப்பியற்கூத்து -

ஊனம் -1. சுட்டறிவாகிய குறைபாடு பொது இயல்பு 2 வாதனை மலம்.

ஊனநடனம்-மறைப்பாற்றலால் உயிர் மறைக்கப்பட்டு மலத்துடன் இயைந்து நிற்கும் நிலை.

ஊன் - உடல், தசை

ஊனையார் - ஊனை + ஆர். உடல்காரிய எ-டு ஊனையார் தத்துவங்கள்.



எக்கிரமம் - எவ்வரிசை

எச்சன் - திருமால்.

எச்சாப் பொருண்மை - மிஞ்சாமை ஆகிய பொருள்.

எடா - உட்கொண்டு, எடுத்து.

எட்டா இயல்பின் - நான்முகன், திருமால் ஆகிய இருவரும் சூளுரைத்துச் சிவன் அடி முடி அறுதி இடுவோம் என்று தேடியும் காணாத சிவன்

எட்டு எழுத்து - ஓம் ஆம் அவ்வும் சிவாயநம.

எட்டுக் கொண்டார் - விண், மண், நீர், தீ, வளி, மதி, கதிரவன், உயிர் என்னும் எட்டினையும் திருமேனியாகக் கொண்டிருக்கும் இறைவன்.

எட்டுப்பண்புகள் - செழுமை, வலிமை, துன்பம், இன்பம், பிரிவிலாது இருக்கை, அயல் நாடு சேரல், மூப்பு, சாதல்.

எட்டுமவர்-தன்முனைப்பாலும் நூலறிவாலும் இறைவனைக் காணவிழைவோர்.

எட்டும் இரண்டும் உருவான இலிங்கம் - எட்டும் இரண்டும் உருவாய் இருக்கின்றயகாரமாகிய ஆன்மா.

எட்டுரு-எட்டு உருவங்கள். எடு எண்ணுறும் ஐம்பூதம் முதல் எட்டுருவாய் நின்றானும் (திப 3). -

எடுத்துக்காட்டு - உதாரணம், அனுமான உறுப்புகளில் ஒன்றுவாயில்நேரிதல் ஆதலை விளக்குவது. எடுத்துக்காட்டு உவமை அணி - உவமேயப் பொருளுக்குக் கூறும் அறத்தை உவமையிலும் எடுத்துக்காட்டுவது. எ-டு

இல்லா முலைப்பாலும் கண்ணிரும் ஏந்திழைபால். உற்று (சிபோ பா49)

இதில் உவமேயமாகிய முதல்வனுக்குவெளிப்பட்டுவிளங்காத தன்மையையும் குருவடிவாகத் தோன்றுவதையும் கூறி, உவமையாகிய அன்பிற்கு வெளிப்

69