பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐதிகம்

ஐந்து சீலம்


 இவை கீழிருந்து மேல் அடுக்காய்ப்பர்வியுள்ளன.ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன் என்பவரோடு கூட, அழிப்பவனாகிய உருத்திரனும் உள்ளான். கீழ்க்கீழ் உள்ளவர் மேன்மேல் உள்ளவரால் படைக்கப்படுபவர். இக்கலைகளில் தத்துவங்களும் புவனங்களும் உள்ளன. இக்கலைகளிலுள்ள உலகங்கள் கீழிருந்து ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றாக அழிந்து வரும். எல்லாவற்றிற்கும் மேலே உள்ள சாந்திய தீத கலையிலுள்ள உலகங்கள் அழிவதே முற்றழிவு. அதாவது, சருவசங்காரம். அதுவே மகா சங்காரம் என்றும் சொல்லப்படும். ஆகவே, அந்த முற்றழிவைச் செய்பவன் மகாருத்திரன் எனப்படுவான். இவனையே சைவசித்தாந்தம் முதற்கடவுளாகிய சிவன் என்று கூறும். ஐந்து கலைகளுக்குரிய சஞ் ரிக்கும் கடவுள்கள் பின்வரு மாறு: 1. நிவிர்த்திகலை - பிரமன் 2. பிரதிட்டா கலை - விட்டுணு 3 வித்தியா கலை- உருத்திரன் 4. சாந்தி கலை - அனந்த தேவர் 5. சாந்திய தீத கலை - சதாசிவர்.

ஐதிகம் - மரபில் வரும் செவி வழிச் செய்தி அளவை, அளவை இல்லாதது என இருவகை, ஆலமரத்தில் பேயுண்டு என்பது காணாத வரையில் அளவை இல்லாதது. புற்றில் நாகம் என்பது அளவை. சான்றோர் வாக்கே மூலமாக அறிதலால், ஐதிகம் சப்தத்தில் அடங்கும்.

ஐந்து - பொருள், பொறி, புலன் முதலியவற்றை ஐந்து ஐந்தாகப் பாகுபடுத்திக் கூறுதல் எ-டு ஐம்பொறிகள்.

ஐந்து அக்கினி - வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்.

ஐந்து அவத்தை - ஐந்து பாடு பா. ஐந்து காரிய நிலைகள்.

ஐந்து உருவம்-வேதனை, குறிப்பு, பாவனை,விஞ்ஞானம், உருவம்

ஐந்து எழுத்து - அஞ்செழுத்து நமசிவாய,

ஐந்து உறுப்புவணக்கம்-பஞ்ச அங்கநமக்காரம் கை இரண்டு, முழந்தாள் இரண்டு, தலை ஆக ஐந்தும் நிலம் பொருந்த வணங்கல்

ஐந்து கந்தம் - உருவம், வேதனை, அறிவு, குறி, வாதனை என ஐந்தின் தொகுதி.

ஐந்து கந்தம் அறக்கெடுகை முத்தி-வீடுபேறு வகைகளில் ஒன்று. பெளத்தர்கள் உருவம், அறிவு, வேதனை, குறி, மணம் ஆகிய ஐந்து தந்தங்கள் அழி வதையே முத்தி என்பர்.

ஐந்து காரிய நிலைகள் - நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல். இவை காரிய அவத்தைகள், காரண அவத்தை மூன்றில் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வது.

ஐந்து நான்கு முன்று இரண்டு ஒன்று - கன்மம் இல்லையாயின், பிறப்பு வேறுபாடும் இராது. அதனால், உடல் ஐம்பொறிகளும் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்னும் அறிவுகளும் இரா.

ஐந்து சீலம் - ஐந்து ஒழுக்கம், இன்னா செய்யாமை, உண்மை, ஒதுநிலை, அத்தேயம், சங்கிரசம்

75