பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருதல்

கல்லாட தேவ நாயனார்


 மேற்கொள்கிறது. நஞ்சு தீர்வதற்குக் கருட பாவனையைப் பயன்படுத்தலாம் எனச் சைவ சித்தாந்தம் அறிவுறுத்துகிறது. நாகம் தீண்டிய ஒருவன் அந்த நஞ்சினின்றும் உய்தற்பொருட்டு மாந்திரிகன் கருடனின் அதிதெய்வமாகத் தன்னைப் பாவித்து,அந்நஞ்சை எடுத்து விடுகிறான். பின்னர்த் தன் பழைய நிலைக்கு வருகிறான். இவ்வாறு பாசத்திலிருந்து விடுபடுவதற்காகச் சிவோகம் பாவனை செய்யப்படுகிறது. பா. சிவோகம்பாவனை.

கருதல் - அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.

கரும மீமாஞ்சை-இதை நிறுவியவர் சைமினி, வேறுபெயர் பூர்வமீமாஞ்சை,வேத கர்ம காண்டத் திற்கேற்பத் தருமத்தின் இயல்பை ஆராய்வது.

கருமேந்திரியம் - பா. கன்மேந்திரியம்.

கருமேனி - மனிதமேனி ஒ திருமேனி.

'கரூர் சித்தர் - 18 சித்தர்களில் ஒருவர்.

கருவறை - கருப்பக் கிருகம். ஆலயத்தின் மையப்பகுதி. நம் நெஞ்சத்தில் இறைவன் இருப் பதற்குரிய அடையாளம்.

கருவாதை - பிறவித்துன்பம் எடு மாயக்கருவாதை.

கருவூர்த்தேவர் - 9 ஆம் திரு முறை நூலாசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.

கருவி - கரணம். மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் என நான்கு இவற்றை மருவி வருவது ஆன்மா. இவ்வகக் கருவிகள் தமக்கு கீழுள்ளவற்றை நோக்கி அசத்தாயும் நிற்கும். ஆன்மாவோ அவ்வாறல்லாமல்,எப்பொழுதும் சித்தாய் நிற்கும்.

கருவி ஈர் ஐந்து - 5 + 5 =10 கருவிகள், சத்தாதி 5, வசனாதி5.

கருவுளமைப்பு - பேறு, இழவு (வறுமை), இன்பம்,பிணி,மூப்பு,சாக்காடு என ஆறு.

கருவேடம் - மாயப் பிறப்பும் தோற்றமும்,

கலத்தல் - கள்வனுடைய கள்ளத்தனமான முறைகளை அறிந்து அவர்களைக் கண்டுபிடிப்பது போல்,இறைவனது திருவருள் ஞானத்தைப் பெற்று,அதுவழியாக அவனை அறிதல்.

கலக்குதல் - குழப்புதல்.

கலம் - பாண்டம் எ-டு இங்குளி வாங்குனம் கலம்போல (சிபோ பா 65).

கலவி - மெய்யுறு புணர்ச்சி.

கலவிகளரி - சிற்றின்பக் களரி.

கல் - 1. பளிங்கு 2 துவைக்கும் கல். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியார் குறிப்பறிந்து,அவர்தம் ஆடையைத் துவைத்துக் கொடுத்தவர்.தோழமை நெறியில் பிறவித் துன்பம் நீக்கியவர். சாக்கிய நாயனார் கல்லால் எறிந்தே வழிப்பட்டார்.

கல் ஆல் - கல் ஆலமரம், எ-டு கல்லால் நிழன்மலை (சிபோ மவா)

கல்லாட தேவநாயனார் -1ஆம் திருமுறையில் திருக்கண்ணப்ப

85