பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்றா

கன்மேந்திரியங்கள்


இடம்,மேல்,கீழ் என மிக விரைவாகச் சுழலும். அதுபோல,அகக்கருவிகள் தொழிற்பாடும் அகரம் முதலிய அக்கரங்களால் மாறிமாறி நிகழும். ஆதலால்,மறதிக்குப்பின் தோன்றும் உணர்வு புதிய உணர்வேயாதலின்,உணர்வு கடல் அலை போல் புதிது புதிதாகத் தோன்றும்.

கற்றா - இளகிய, எ-டு கற்றா மனம்.

கறியாக்க - கறிசெய்ய, பா.அறுத்தவர்.

கறை - நஞ்சாகிய கறுப்பு.

கறை மிடறு - காளகண்டம்.

கனகம் - பொன்.

கனக வரை - மகாமேரு எ-டு கனக வரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வார் (சிசி பப9).

கனல் - நெருப்பு.

கனவு - சொப்பனம்.

கன்மம்- பொருள் வினை அகங்கார மமகாரங்கள் காரணமாகச் செய்யப்படுவது. பாசம் 5 இல் ஒன்று.

வகை : மூவகை

1.ஆகாமிய கன்மம்:வேறுபெயர் துல கன்மம், மந்திரம்,பதம்,வன்னம், தத்துவம் புவனம்,கலை என்னும் 6 தத்துவங்களின் இடம்,மனம்,வாக்கு, காயம் என்னும் மூன்றாலும் செய்யப்படும் நல் வினை,தீவினை என்னும் இருவினைகளாம் இது. தமிழில் செய்வினை,எதிர்வினை என இது கூறப்படும்.

2.சஞ்சிதக்கன்மம். வேறுபெயர் சூக்கு கன்மம், அபூர்வம், புண்ணியம்,பாவம் என்னும் பாரியாயப் பெயர் பெறும். இரு வினைகள் பக்குவமடையும் வரை புத்தி, தத்துவம் பற்றுக் கோடாக மாயையில் கட்டுப் பட்டுக் கிடக்கும். தமிழில் இது பழவினை, கிடைவினை, முன்வினை என்று கூறப்படும்.

3.பிராரத்தகன்மம் : கட்டுப்பட் டிருந்த சஞ்சித கன்மம். இன்ப துன்பமாகிய பயனைத்தரநுகர் வதாகும் இது. நுகருங்கால் ஆதிதை வசம், ஆத்தியான் மிகம், ஆதிபெளதிகம் என மூவகை.

ஆதிதை வசம்: இறப்பு, பிறப்பு, நரை, திரை, நோய் முதலிய வாய் உயிர்கள் முன்னிலை யின்றித் தெய்வ முன்னிலையாக வருவது.

ஆத்தியான்மிகம் - மாந்தர், விலங்கு முதலிய ஆன்மாக்கள் முன்னிலையாக வருவது.

ஆதிபெளதிகம் : மின்னல், இடி, காற்று, மழை, தீ முதலிய பூத முன்னிலையாக வரும் இன்ப துன்பங்கள். பிராரத்துவம் தமிழில் நுகர்வினை, ஊழ்வினை என்று கூறப் பெறும்.

கன்ம உறுதுணை - உலகு, உடல், கரணம், காலம், உறுபலம், நியதி, செய்தி.

கன்ம ஒப்பு - இருவினை ஒப்பு. முந்நிகழ்ச்சிகளில் ஒன்று. முந்நிகழ்ச்சி என்பது இருவினை ஒப்பு, மலபரிபாகம், சித்திநி பாதம் ஆகிய மூன்றும்.

கன்மேந்திரியங்கள் - வேறு பெயர் கருமேந்திரியங்கள், தொழிற்பொறிகள், வினைப் பொறிகள் இவை 5 வாக்கு (மொழி), பாதம் (கால்), பாணி

88