பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கன்னல்

காட்சித்திட்டம்


(கை), பாயு (எருவாய்), உபத்தம் (கருவாய்). இவை அகங்கா ரத்தின் இராசகுணத்தில் ஒன் றன்பின் ஒன்றாகத் தோன்றுபவை.

கன்னல் - கரும்பு.

கன்னி - 12 இராசிகளில் ஒன்று. சோதிடம் சார்ந்தது.

கா

காசம் - 1, ஈளைநோய் எ-டு காசம் மருவும் கடந்தோறும் (சிசிபப 2282) விண்

காசறு - குற்றமற்ற எ-டு காசறும் உரை (சிசிசுப 7) பா. மாசறு

காசிக்கு நேர்த்தலங்கள்- இவை 61. திருவெண்காடு 2 திருவையாறு 3 மயிலாடுதுறை 4 திருவிடை மருதூர் 5, திருச்செங்கோடு 6. திருவாஞ்சியம்.

காசியர் - ஏழுமுனிவர்களில் ஒருவர்.

காசினி - உலகம்.

காஞ்சனம்-பொன் பா. கனகம், தமனியம்.

காஞ்சித்திணை-நிலையா ஒழுக்கம்.

காட்டும் உபகாரம்,காணும் உபகாரம் - இவ்விரு உதவிகளையும் செய்பவன் இறைவன்.

காட்சி - பொருள்: கண்ணால் காணுதல். வகை: 1. வாயில்,மானதம்,தன்வேதனை,யோகம் என நான்கு 2. பொதுக்காட்சி (ரூபம்) அல்லது நிருவிகற்பம், ஐயக்காட்சி (தரிசனம்) 3.தெளி வுக்காட்சி (சுத்தி) என மூன்று வகை. இம்மூன்றும் முறையே குரு அறிவுரையைக் கேட்டல் சிந்தித்தல், தெளிதல் என்பவற்றால் நிகழ்பவை.

விளக்கம் : 1. வாயிற் காட்சி: புறத்தே உள்ள சுவை,ஒளி,ஊறு,ஓசை நாற்றம் ஆகியவை ஐம்பொறிகளால் அறியப்படுபவை. 2.மானதக் காட்சி: ஐம்பொறிகளால் அறியப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை மனம் முதலிய அகக்கருவிகளால் அறியப்படுதல். 3.தன்வேதனைக்காட்சி ; அகக்கருவிகளுள் மனத்துக்குமேலாய்ப் புத்தியில் தோன்றியவைகள் ஆன்மாவினால் உணரப்படுதல் 4.யோகக்காட்சி: யோக முறைகளால் அறிவைத் தடைசெய்யும் மல ஆற்றல்களை ஒருவாறு , நீக்கி, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக் காலப் பொருள்களையும் காண்கின்ற காட்சி. 5.நிருவிகற்பக்காட்சி: தத்துவங் களிலிருந்து தான் வேறு எனக் காணல், தன் உண்மை நிலை அறியாமை. 6.ஐயக்காட்சி : தன் உண்மை நிலை அருளொடு பிரிப்பின்றி நிற்பதை அறிந்தும் அவ்விரு ளில் அடங்காமல் அருளிலும் கருவியிலும் மாறிமாறிப் போக்குவரத்தால் நிற்றல். 7.தெளிவுக்காட்சி : அருளில் அடங்கி அடிமையாய் நிற்றல்.

காட்சித்திட்டம் - பொருள் காட்சியில் ஒரு பொருளைத் திட்ட வட்டமாக அறியும் முறை. ஐயந்திரிபற்ற காட்சி இது.

நிலை: இரு நிலைகள் 1.நிருவி கற்பம் (பொதுக்காட்சி) உண்மை மட்டும் அறிவது 2. சவி கற்பம் (சிறப்புக்காட்சி) பொருளின் பெயர், சாதி, குணம்,

89