பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வருத்துந் தெய்வமாகிய அணங்கு உள்ளது என்று ஐயுற்று அஞ்சி நடுங்கியவர்கள் சொல்ல, அதனைக் கேட்டவர் களுக்கும் அவ்வச்சவுணர்வே அனங்கெனத் தோன்றி அவர்களையும் நடுக்கமுறச் செய்யும் என்பது மனவியல் புணர்ந்தோர் கண்ட உண்மையாகும். இவ்வுண்மையினை

"நெஞ்சுநடுக்குறக் கேட்டுங்கடுத்துந் தான்

அஞ்சியது ஆங்கே அனங்காகும் என்னுஞ்சொல் இன்றிங் கிளவியன்ய் வாய்மன்ற” (கலித். 24)

எனவரும் பாலைக்கலித் தொடரிற் பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம். "நெஞ்சம் நடுக்கம் உறும்படி பலகாலும் கேட்டும், கேட்ட அதனை உண்டோ இல்லையோ என்று ஐயுற்றும் தாம் அஞ்சியிருந்த பொருள் மெய்யாய் வருத்துந் தன்மையதாகும் என்ற பழமொழி இனிய மொழியினை யுடைய தோழியே நிச்சயமாக உண்மை” என்பது இத்தொடரின் பொருளாகும். 'நெஞ்சுநடுக்குறக் கேட்டது” என்றது இவ்வாலமரத்திலே பேய் உள்ளது” என்று பிறர் சொல்லக் கேட்டது. அச்சொல்லைக் கேட்டவர்கள் இவ்வாலமரத்திற் பேய் இருக்குமோ? என்று முதலில் ஐயுற்று அஞ்சியவர்கள் எதிர்பாராத நிலையில் இருளில் அவ்வாலமரத்தின் அருகே தனித்துச் சென்றபோதுஅவர்கள் உள்ளத்திற் கொண்ட அச்சவுணர்வே பேய் வடிவிற்றோன்றி அவர்களை வருத்துதல் உறுதி என்பதனைப் புலப் படுத்துவது 'நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தான் அஞ்சிய ஆங்கே அனங்காகும்’ என்னும் இப் பழமொழி யாகும் சங்ககாலத்தில் வழங்கிய இப்பழமொழியினை அடியொற்றியதே அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என இக்காலத்து வழங்கும் பழமொழி யாகும். இத்தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் மக்களை அச்சுறுத்துந் தன்மையதாகிய அணங்கு உண்டு என்பதும் அத்தகைய அணங்கு அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும் உண்டு என மற்றவர் சொல்லக் கேட்டு அஞ்சிய அச்ச வுணர்வே அணங்குருவில் தோன்றி அஞ்சியவர்களை வருத்துதலும் உண்டு என்பதும் அச்சத்தினை யகற்றிய