பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

105


உள்ளத்துரனுடையவர்களை அணங்கு வருத்தமாட்டாது என்பதும் சங்ககாலத்து மக்கள் உளங்கொண்ட வாழ்விய லுண்மையாதல் நன்கு புலனாம்.

மக்களை வருத்தும் இயல்புடையனவாகிய அணங்கு பேய் பூதம் முதலியவற்றுக்கு அவை வேண்டிய உணவாகிய பலிப்பொருள்களைக் கொடுத்து வழிபட்டால் அவற்றால் உண்டாகும் இடையூறுகளிலிருந்து தாம் தப்பி உய்தி பெறலாம் என்ற நம்பிக்கை பண்டைக்கால மக்கள் உள்ளத்தே நிலைபெறுவதாயிற்று. எனவே அவர்கள் அனங்குபேய் முதலியவற்றுக்கு ஆடு கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிட்டு அவற்றால் வரும் இன்னல்களி னின்றும் தாம் நீங்கியதாக எண்ணி அவற்றைத் தெய்வமெனக் கொண்டு வழிபடுவாராயினர். இவ்வாறு பண்டைக்கால மக்கள் பேய் பூதம் முதலாக அச்சுறுத்தும் தெய்வங்கள் உள்ளன எனக் கொண்ட நம்பிக்கையின் விளைவாகவும் தம் உள்ளத்தில் இயல்பாகத் தோன்றிய அச்சத்தின் காரணமாகவும் உலகிற் பலவிடங்களிலும் சிறு தெய்வ வழிபாடுகள் பன்னெடுங்காலமாகத் தோன்றி நடைபெற்று வருகின்றன. இந்நிலவுலக முதலாகவுள்ள பலவேறு அண்டப் பரப்பினையும் உலகியற் பொருள்களையும் நுனித்துணர்ந்து தமது வாழ்க்கையினை இடர்நேராது இனிய முறையில் அமைத்துக்கொண்டு எல்லர் வசதிகளும் உடையராய் நெடுநாள் வாழ்தற்கேற்ற நுண்ணறிவும் எண்ணிய எண்ணியாங்கு இயற்றவல்ல ஆற்றலும் தொழில் நுட்பமும் ஒருங்கே கைவரப்பெற்று மக்கட் சமுதாயம் காலந்தோறும் வளர்ச்சிபெற்று வருவதனை அறிஞருலகம் நன்குனரும். இங்ங்ணம் மக்கட்குலத்தார் முதிர்ந்த நாகரிக நிலையினராய் வாழும் இக்காலத்திலும் இவ்வுலகவாழ்க்கையில் எதிர்பாராதவகையில் நேரவிருக்கும் துன்பங்களை யெண்ணித் தாம் தாம் விரும்பிய தெய்வங்களைக் குறித்துத் தாம் உய்தி பெறுதல் வேண்டி அச்சத்தால் வழிபாடு செய்வதே பலவேறு மதங்களின் ஒழுகலாறுகளாகப் பெரும்பான்மையும் நிகழ்ந்து வருவதனைக் காண்கின்றோம். நுண்ணறிவின் பயனாக அச்சம் தீர்ந்த மக்களும் தாம் மட்டும் சிறப்பாக வாழ்ந்தாற்போதும் என்னுந் தன்னலவுணர்வினராய்.