பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அறப் பெயர்ச் சாத்தன் என்பவன் வள்ளலாவன். சாத்தன், கொற்றன், சாத்தி, கொற்றி ல் , தமிழகத்தில் பொதுப் பெயர்களாக வழங்கப் பெறுவன. இவற்றுள் சத்தன் என்ற பெயர் ஒரு தெய்வத்தைக் குறித்த பெயராகச் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. வணிகச் சாத்தின் தலைவனாக வீரச் செயல் புரி

சிந்து நாட்டினைக் காத்தமை யால் போரில் உயிர்துறந்த சாத்தன் என்னும் தலைவனைத் தெய்வ நிலையில் வைத்து மக்கள் வழிபடும் நிலை யேற்பட்டது. அதனால் சாத்தன் என்னும் தெய்வம் ஊர் காவல் தெய்வங்களுள் ஒன்றாக மதிக்கப்பெற்று எல்லைத் தெய்வமாக ஆயிற்று. சாத்தன் என்னும் இப்பெயர் மக்கட்குரிய இயற்பெயராகவும், தெய்வப் பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் நிலையில் அமைந்த தெய்வப் பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. எனவே 395ஆம் புறப்பாடலிற் குறிக்கப்பட்ட பிடவூர் அறப்பெயர்ச் சாத்தனாகிய சங்ககால வள்ளலும், கி.பி. 8ஆம் நூற்றாண்டின ராகிய சேரர் காவலர் விண்ணப்பஞ்செய்த திருவுலாப் புறத்தைக் கயிலையிற் கேட்டுப் பாரில் வேதியர் திருப்பிட வூரில் வெளிப்படப் பகர்ந்த மாசாத்தனார் ஆகிய தெய்வமும், காலத்தாலும் பிற சூழ்நிலையாலும் தம்முள் வேறு பட்டவர்கள் என்பது தெளிவு.

தொன்று தொட்டு ஊர்காவற்றெய்வமாகப் போற்றப் பெறும் ஐயனாருக்குப் பொதுவாக, அமைக்கப்பட்ட கோயிலே புறம்பனையான் வாழ்கோட்டம் எனச் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டது. இனி ஊரையொட்டிய பலவேறு தெய்வக் கோட்டங்கட்கு இடையே புகாரில் அமைக்கப்பெற்ற சிறப்புடைத் தனிக் :ேலே பாசண்டச் சாத்தன் கோயிலாகும். பாசண்டம் ةT أةTرأي لبنان تدهن لا" نارك) زئيري لسا தருக்கக் கோவை’ எனப் பொருளுரைப்பள் சிலப்பதிகார உரையாசிரியர். பாசண்டச் சாத்தன் மகாசாத்திரன். மகாசாத்திரனை ‘மகா சாத்தா எனவும் வழங்குவர். பாசண்டம் என்பதற்குப் பாஷாண்டம்’ எனப் பொருள் கொள்ளுதல் தவறு. சிலப்பதிகாரத்திற் கூறப்படும் பாசண்டச் சாத்தன் மறையவர் குடியிற் பிள்ளையாய் வளர்ந்து தேவந்தி என்னும் மங்கையை மணந்து அவளால் வழிபடப் பெற்ற