பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


போற்றி வழிபடுவாராயினர்.

குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனுக்குப் பூசனை புரிவோன் அம்முதல்வனது படைக்கலமாகிய வேலினை ஏந்தி ஆடுதலின் வேலன் என்று அழைக்கப்பட்டான். வேலன் ஆடும் ஆடலில் மலரின் உள்ளிருந்து எழும் மனம் போன்று அவனது உயிருணர்வின் வாயிலாகத் தெய்வம் வெளிப்பட்டுத் தோன்றுதலின், தெய்வத்தன்மை வாய்ந்த அவனது ஆடல் வெறி எனப் பெயர் பெறுவதாயிற்று. வெறி: மனம் ஈண்டுத் தெய்வ மனத்தினைக் குறித்து நின்றது. இவ்வாறு தெய்வம் தன்மேல் ஆவேசிக்கப்பெறும் நிலையில் முருகனை வழிபடும் முறையினை அறிந்து வெறியாடல் நிகழ்த்தும் சிறப்பு முருகபூசை செய்யும் வேலவனுக்கு உரியதாதல் பற்றி,

“வெறியறி சிறப்பின் வேலன்”

எனவும், மக்களது நோய் நீங்கத் தெய்வத்திற்குப் பலியிடுதல் வேண்டும் என உயிர்க் கொலை புரிதலின் வெம்மைதரும் வாய்மையுடைமைபற்றி,

È & * ५ • 33 வெவ்வாய் வேலன்

எனவும் அடைபுணர்த்து ஒதினார் தொல்காப்பியனார். மலைநிலமக்கள் தம் குடியில் மனமாகாத இளமகளிர் மனஞ்சோர்வுற்று உடல் வாட்டமுற்ற நிலையில், அவ்வாட்டத்திற்குக் காரணம் தம் குல தெய்வமான முருகப்பெருமானது மணங்கமழ் தெய்வத் தோற்றத்தால் தாக்கப்பட்டு அஞ்சினமையே எனவும், முருகபூசை செய்யும் வேலனை அழைத்து வெறியாடல் நிகழ்த்தி முருகப் பெருமானை வழிபட்டால், அம்முதல்வனது திருவருளால் தம் மகளிர் வாட்டம் தீர்ந்து தெளிவு பெறுதல் திண்ணம் எனவும் எண்ணி வேலனைக் கொண்டு கட்டினாலும் கழங்கினாலும் நோயின் காரணமுனர்ந்து வெறியாடல் நிகழ்த்துவர். இந்நிகழ்ச்சி மலைநிலமக்களது அகவியல் வாழ்க்கையில் காணப்படும் மரபாகச் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்றுள்ளது. முருகப்பெருமானை வழிபட்டு