பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இருப்பதனை அறிந்த தலைவி தன் மெலிவிற்குக் காரணம் தன் ஆருயிர்த்தலைவனை அணுகப் பெறாமையே என்பதனை உணராது, முருகனால் ஏற்பட்ட வருத்த மென்றெண்ணி இவ்வெறியாட்டினைத் தொடங்கு கிறார்களே இவ்வெறியாட்டில்.முருகப்பெருமான் தோன்றி வேலன் வாயிலாக உண்மையை உணர்த்தின் நம் களவு வெளிப்படுமே எனவும், ஒருகால் தெய்வத்தின் திருவருளால் எனது மெலிவு தீரப்பெறுமாயின் என் மெலிவிற்குக் காரணம் தம்முடைய பிரிவன்று எனத் தலைவர் பிறழவுணர்ந்தால் என்னாவது எனவும், அஞ்சுதல் இயல்பு. தலைமகள் உள்ளத்தே தோன்றும் இவ்வச்சம்,

“வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும்”

(தொல். களவு 21)

எனவரும் தொல்காப்பியத் தொட்ரில் குறிக்கப் பெற்றமை காணலாம். "தலைவி வேறுபாடு எற்றினான் ஆயிற்று எனச் செவிலி வெறியாட்டுவிக்கவரும் அச்சத்தினானும் தலைவி குறிவழிச் செல்லாளாம்” என்பது இத் தொடர்க்கு இளம்பூரணர் தரும் உரையாகும். தலைவி வேறுபாடு எற்றினான் ஆயிற்று என்று வேலனை வினாவி வெறியாட்டு எடுத்தபொழுது தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்’என்பது அத் தொடரின் பொருளாம். வெருவுதல் : அஞ்சுதல்; அஃதாவது முன்னமேயே தனது அயன்மையால் கடைப்பிடி இன்றி நெகிழ்ந்து களவொழுக்கத்தின் இன்பமே கருதி ஒழுகும் தலைமகன் இப்பொழுது நமது ஆற்றாமையைத் தனித்தற்கு முருகனை வழிபட்டு வெறியாடுதலாகிய பிறிதொரு மருந்தும் உண்டு என்று அறிவானானால், அவன் நம்மைத் திருமணம் செய்து கொள்ளும் காலம் மேலும் நீளுமே என்று தலைமகள் அஞ்சுவள். இங்ங்ணம் தலைமகள் வெறியாட்டிடத்தே கொண்ட அச்சம்,

“பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅற்

றுனியில் கொள்கையொடு அவர்நமக் குவந்த இனிய வுள்ளம் இன்னா வாக