பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

229


முனிதக நிறுத்த நல்க லெவ்வம் சூருறை வெற்பன் மார்புறத் தணிதல் அறிந்தன ளல்லள் அன்னை வார்கோற் செறிந்திலங்கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர்டி இரீஇ முருகன் ஆரணங்கென்றலின் அதுசெத்து ஒவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கஎன் மகட்கெனப் புரை இக் கூடுகொள் இன்னியங் கறங்கக் களனிழைத்து ஆடணி பயர்ந்த அகன்பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர் ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச் செல்வன் பெரும்பெயர் ஏத்திவேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின் என்னாம் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வலாக ஆடியபின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவாதாயின் இம்மறை அலரா காமையோ அரிதே அஃதான்று அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடியுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் அதனினு மரிதே' (அகம். 98)

எனத் தலைமகள் தோழியை நோக்கிக் கூறும் அகப்பாடலில் நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளமை காணலாம். குளிர்ந்த மலைப்பக்கத்தே நம் தலைவர் நமக்கு வந்தளித்த அவரது இனியவுள்ளம் இன்னாவாயினமையின், அத்தலைவர் மார்பு உறுவது ஒன்றினாலேயே தனியும் என்றதனை நம் அன்னை