பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

233


எழுந்தருளினமை குறித்து எங்களைப் போன்ற பேதை யோரால் இகழப்படும் நிலையினை அடைந்தாலும் மன்னுயிர்த் தொகுதிகள் அனைத்தையும் வாழ்விக்கும் முழு முதல் கடவுளாகிய நின்னை வாழ்த்துவதே என்போல் வார்க்கும் வாழ்வளிக்கும் நற்செயலாம் என்பாள்,

"வாழிய முருகே"

என உளமுவந்து வாழ்த்தினாள். தோழியின் கூற்றாக அமைந்த இவ்வகப்பாடல் முருகக் கடவுளது முற்றுனர் வுடைமையினையும், அன்பர்க்கு எளிவந்தருளும் பேரருளுடைமையினையும் பரவிப் போற்றும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

குறிஞ்சிநில மக்கள் தம்குல முதல்வனாகிய முருகப் பெருமான் மனங்கமழ் தோற்றத்து இளநலனுடையனாய்க் கடப்ப மலர்மாலையைச் சூடிக் கையில் வேலினை ஏந்தி வழிபடும் அன்பர்கள் முன்னே காட்சிதருதல் உண்டு என்பதனை உறுதியாக நம்பினார்கள். இவர்தம் வாழ்க்கையில் நிலைபெற்றுள்ள கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு புனைந்துரை வகையாகக் கொண்டு பாடப்பெற்ற செய்யுட்கள் சங்கத் தொகை நூல்க ளெனப்படுகின்றன. களவொழுக்கம் ஒழுகும் தலைவன் நறுமலர் மாலையைச் சூடிக் கையில் வேலேந்தி இரவுக் குறியில் தலைமகள் மனையை நாடிச் சொன்றானாக, அந்நிலையில் அவனைக் கண்ட செவிலி, அவனை முருக னெனப் பிறழவுணர்ந்து வரவேற்றுப் பரவுதல் செய்தாள் எனத் தோழி சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கப் படைத்து மொழிவதாக அமைந்தது 272ஆம் அகப் பாடலாகும்.

‘மின்னொளிர் எஃகம் சென்னெறி விளக்கத்

தனியன் வந்து பணியலை முனியான் நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங்கண்ணி அசையா நாற்றம் அசைவளி பகரத் துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக்