பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தாயார், உண்மையுணர வேண்டிக் குறிசொல்ல விரும்பி யழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின்வேறாய் வெட்சியில் வரும் துறையான வேலன் வெறியாட்டு, வேலன் விரும்பிச் சூடும் பூவின் பெயரால் காந்தள் எனக் குறிக்கப்பட்டது. எனவே வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட்சிக்கும் பொதுவாயினும் வெட்சியில் வரும் வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன். குறிஞ்சித் தினையில் வரும் வெறியாட்டில் வேலன் குறிஞ்சிப்பூச் சூடுதல் மரபு” என்பர் நாவலர் பாரதியார்.

"அங்கடி வேலன் முருகொடு வளைஇ

அரிக்கூடின்னியம் கறங்க நேர்நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர்மிகு நெடுவேட் பேணி தழுப்பிணையூஉ மன்றுதொறு நின்ற குரவை’ (மதுரைக் 611-615)

என மதுரைக் காஞ்சியில் குறிக்கப்பெறும் வெறியாடல் அகத்தைச் சார்ந்தது என்பது அவர் கருத்து. இவ்வாறு அகத்திலும் புறத்திலும் வெறியாட்டு நிகழ்த்துவோன் வேலனாயினும் அகமாகிய குறிஞ்சித்தினை வெறியாட்டில் சூடும்பூ குறிஞ்சிமலர் எனவும் புறமாகிய வெட்சித்தினை வெறியாட்டில் சூடும்பூ காந்தள் எனவும் பகுத்துணர்த்துவர் பாரதியார்.

"அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி

சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் ஆகுவதறியும் முதுவாய் வேல, கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்” (அகம். 195)

எனவரும் தொடர், கட்டினாலும் கழங்கினாலும் குறி பார்த்துத் தலைமகள் மெலிவிற்குக் காரணம் முருகனது அணங்கே என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரே வேலனைக் கொண்டு வெறியாடுதல் மரபு என்பதனை வற்புறுத்தும்.

முருகனை வழிபடும் நிலையில் ஆடப்பெறும்