பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

267


ஆர்வலரேத்த அமர்ந்தினிதொழுகிக் காதலினுவந்து வரங்கொடுத்தன்றேயொருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க்கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருளை யேமுற நாடித் திங்கள்போலத் திசை விளக்கும்மே ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே”

எனவரும் பகுதியாகும். குற்றமற்ற கோட்பாட்டாலே தாம் தாம் மேற்கொண்ட தொழிலை முடிப்பவருடைய மனத்திலே எழுந்தருளியிருந்து உள்நின்று அருளும் ஒளியும் நிறமும் வாய்ந்த ஆறு முகங்களிலே ஒருமுகம் பேரிருளால் மூடப்பட்ட உலகம் குற்றமின்றி விளங்கும்படிப் பல கிரனங்களையும் தோற்றுவித்தது. ஒரு முகம் தன்மேல் அன்பு செய்தவர்கள் துதிக்க அதற்குப் பொருந்தி அவருக் கினிதாக நடந்து அவர் மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து அவர்கள் வேண்டும் பொருள்களை முடித்துக் கொடுத்தது. ஒரு முகம் மந்திரத்தையுடைய வேதத்திற்குரிய முறை தப்பாத அந்தணர்களுடைய வேள்வியிலே தீங்கு வாராதபடி நினைந்தருளாநின்றது. ஒருமுகம் இவ்வுலகில் வழங்காத வேதங்களிலும் ஏனைய நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து முனிவர்கள் ஏமம் உறும்படி அறிவுறுத்தி திங்கள் போலத் திசைகள் எல்லாம் விளங்கச் செய்கின்றது. ஒருமுகம் எல்லா உயிர்களிடத்தும் செல்கின்ற நடுவு நிலைமையைக் கெடுத்துத் தியோரைக் கொல்ல வேண்டுமென்று சினங் கொண்ட திருவுள்ளத்தோடே அழித்தற்குரிய அசுரர் முதலியோரைப் பொன்றக் கெடுத்துக் களவேள்வியை வேட்கின்றது. ஒருமுகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய கொடிபோலும் இடையையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இதன்கண் முருகப் பெருமா னுடைய ஆறுதிருமுகங்களுக்கும் உரிய பொது இயல்பினை,

"தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார்

மனனேர் பெழுதரு வாணிறமுகனே'