பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கலந்து தோன்றுவன விடியற் காலத்துப் பலநிறத்து மேகம் சிதைந்த வானம் போலப் பொலிந்து தோன்றும்.

என இவ்வாறு திருப்பரங்குன்றத்தினை வழிபடவரும் பாண்டியனது தானைச் சிறப்பினையும் அவனுடன் வரும் அமைச்சர் முதலியோர் மன்னனாற் சிறப்புப் பெற்ற நாட்டவர் நகரத்தார் ஆகியோர் காணப் பரங்குன்றத்தில் முருகனுக்கு நிகழ்த்தப் பெறும் திருவிழாச்சிறப்பினையும் பூசை முறையினையும் அவற்றிற்கலந்துகொள்ளும் மக்கட் கூட்டத்தாரின் விளையாட்டு நிகிழ்ச்சிகளையும் குன்றத்தின் இயற்கை எழில் நலங்களையும் மால்மருகன் கோயிலின் செயற்கை அணிநலங்களையும் விரித்துக் கூறிய நப்பண்ணனார், பரங்குன்றத்தில் முருகப் பெருமானுக்கு நிகழும் திருவிழாவிற் கலந்துகொள்ளுதலால் இளமகளிர் பெறுதற்குரிய மனைவாழ்க்கையின் சிறப்பினை வகுத் துரைப்பதாக அமைந்தது.

“நினயானைச் சென்னி நிறங்குங்குமத்தாற்

புனையாப்பூநீருட்டிப் புனைகவரி சார்த்தாப் பொற்பவளப்பூங்காம்பிற் பொற்குடையேற்றி மலிவுடை யுள்ளத்தான் வந்து செய் வேள்வியுட் பன்மணமன்று பின்னிருங் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத்தார் நின் கொடியேற்ற வாரணங் கொள் கவழமிச்சில் மறுவற்ற மைந்தர் தோளெய்தார் மணந்தார் முறுவற் றலையளி யெய்தார் நின்குன்றங் குறுகிச்சிறப்புணாக்கால்” (பரி.19. 85-94)

எனவரும் பரிபாடற் பகுதியாகும்.

"நெடுவேளாகிய இறைவனே, நீ கோயில் கொண்டெழுந்தருளிய திருப்பரங்குன்றினையடைந் து நினது கொடியை யேற்றப்படும் நின் யானையின் மத்தகத்தைக் குங்குமத்தால் அலங்கரித்துப் பூவோடு கூடிய நீரால் அதனை வழிபட்டு அதற்கு உணவினை இனிதாக ஊட்டி அதன் செவியின்கண் வெண்சாமரை சார்த்திப் பொலிவுடைய பவளத்தாற் செய்த நல்லகாம்பினையுடைய பொற்குடையை