பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

393


என்போர் செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானை வேள்வித் தீ வடிவிற் போற்றி வழிபடும் விரிசடை விரதிகள் எனக் கருதவேண்டியுள்ளது. அருந்தவ முனிவர்களாகிய இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் ஊர்ப்புறங்களிலும் தங்கித் தவம்புரியும் இயல்பினர். வேள்விக்குண்டத்தில் தீயினைவளர்த்து நறுநெய் ஆவுதி வழங்கி அழல் வண்ண னாகிய இறைவனை வழிபடுதல் இவர்தம் இயல்பாகும். தவமுனிவராகிய இவர்கட்கு யானை முதலிய விலங்குகளும் பணி செய்தல் உண்டு.

“இன்சீர்க்

கின்னரம் முயலும் அணங்குடைச்சாரல் மஞ்ஞை யாலும் மரம்பயிலிறும்பின் கலையாய்ந்துதிர்ந்த மலரவிழ்புறவின் மந்தி சீக்கும் மாதுஞ்சுமுன்றித் செந்திப்பேனிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கருவிய மலைகிழவோனே"

(பெரும்பாண். 493-500)

எனவும்,

“காணயானை தந்த விறகின்

கடுந்தெறற் செந்தீவேட்டுப் புறந்தாழ்புரிசடை புலர்த்துவோனே" (புறம். 25t)

எனவும்,

“தாழ்காவின், அவிர் சடைமுனிவர் அங்கிவேட்கும்

ஆவுதி நறும்புகை” (பட்டினப்.53,54)

எனவும்,

"சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பினை

அந்தியந்தணர் அருங்கடன் இறுக்கும் பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே (புறம். 2)

எனவும் வரும் தொடர்கள் இத்தகைய அருந்தவ