பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

405


கானலாம். எனவே கணியன் பூங்குன்றனார் பாடலில் 'யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்று முதற்கண் காணப்படுந் தொடர் உலகவொற்றுமை பற்றி இக்காலத்திற் கூறப்பட்ட வெறும் உபசாரமொழி போல்வதன்று என்பதும் அத்தொடர் தமிழர் கண்ட தத்துவவுணர்வின் பயனாக உருவாகிய உண்மையினைப் புலப்படுத்தும் வாய்மொழி பாகும் என்பதும் இங்கு மனங்கொளத்தக்கனவாகும்.

உலக வாழ்க்கையில் மக்கள் அடையும் கேடும் ஆக்கமும் பிறரால் தரப்படுவன அல்ல, அவர்கள் செய்த இருவினை காரணமாக ஊழ்வயத்தால் தாமே வருவன என்னும் மெய்ம்மையினை வற்புறுத்துவது, தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற தொடராகும். களவொழுக்கம் ஒழுகும் தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதலில் நாட்டமின்றி அவ்வொழுக்கத்தில் நீட்டித்தொழுகியவழி அவனைத் தெருட்டும் தோழி அவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறுவாளாய்ச் சொல்லியது, "யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை' (நற். 88) எனவரும் நற்றினைப் பாடலாகும். "நாம் செய்த பழவினைப் பயனாகிய நாம் செய்த வினையால் நாமே தேடிக் கொண்டது எனத் தெளிந்து நாமே நுகர்வதன்றிப் பிறரைக் காரணமாக எண்ணி ஏன் மயங்குகின்றாய்” எனத் தலைவியை நோக்கி வினவும் முறையில்அமைந்தது, மேற்குறித்த நற்றிணைத் தொடராகும். 'தீதும் நன்றும் பிறர்தர வாரா என்னுங் கொள்கையினை வலியுறுத்தும் முறையில் இத்தொடர் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளத்தகுவதாகும்.

உடம்பும் உயிரும்

கானப்படும் உருவுடையதாகிய உடம்பும் அதனை உடனிருந்து இயக்குவதாய்க் காணாத மரபினதாகிய உயிரும் பொருட்டன்மையால் வேறுபட்ட இருவேறு பொருள்கள் என்பதும் அவ்விரண்டும் ஒற்றுமைத் திறத்தால் ஒன்றெனத் தோன்றினும் அவற்றின் தன்மையால் வேறுபட்டன என்பதும், அவற்றுள் காணப்படும் உருவினதாகிய உடம்பு அறிவில் பொருளாய் அழியுமியல்பினதாம் என்பதும் கானா