பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

407


"தொன்று மூத்தவுயிரினும் உயிரொடு

நின்று மூத்த யாக்கையன்ன” (புறம், 24)

எனவரும் புறப்பாடற்றொடராகும்.

உயிர் உடம்பை விட்டுப் பிரியுங்காலத்துத் தன்னை மறவாது அடுத்தவினை காட்டுங் கதிகளிற்புகும் நினைவுடையதாய்ச் செல்லும் என்பது,

“என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்

என்னியான் மறப்பின் மறக்குவென்’ (புறம்.175)

என ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடிய புறப்பாட்டாலறியலாம். "ஆதனுங்கனே என்னுயிர் உடம்பை விட்டுப் போகும்போதும் யான் உன்னை மறப்பேனாயின் நின்னையும் மறப்பேன். அக்காலத்து உடம்பை விட்டுப் பிரியும் இடர் நிலையேனாகிய யான் என்னை மறவாமை போல எனக்குப் பேருதவிபுரிந்த நினையும் மறக்கமாட்டேன்” என்னுங் கருத்திற் கூறப்பட்டது இத்தொடராகும்.

பகைவர் பற்றிச் சென்ற ஆனிரையை மீட்டுச் செருக்களத்தில் இறந்து பட்டவீரனைக் குறித்து இரங்குவதாகிய கையறு நிலைச் செய்யுளில்,

"நிரையொடு வந்த வுரையனாகி உரிகளையரவமானத்தானே அரிது செல்லுலகிற் சென்றனன், உடம்பே கானச் சிற்றியாற்றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டுப்பட்டன்றே (புறம், 280)

என வரும் பகுதி உயிரும் உடம்பும் வேறென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

"ஆனிரையுடனே வந்த புகழையுடையனாய்த் தோல் உரித்த (சட்டை கழற்றிய) பாம்புபோல அரிது செல்லுலகமாகிய தேவருலகிற் போயினான். அவனது உடம்பு (வீரர்கள் அம்பு எய்து பழக காட்டிற் சிற்றாற்றங்