பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

419


மாறுகோளுரை பகரும் சமயவாதிகளின் கருத்தின் வழியே சார்ந்து நின்று அவர்களுள் ஒருதிறத்தார்க்குரிய கொள்கை யினை மட்டும் வற்புறுத்தும் நிலையில் ஒருபாற் சாயாமல், உலகமக்கள் எல்லோர்க்கும் உரிய இவ்வுலக வாழ்வின்ை அடிப்படையாகக் கொண்டு உயிர்கட்குச் சார்பாக எக்காலத்தும் மாறாதுள்ள செம்பொருளுண்மையினை உள்ளத்திற்கொண்டு உலகத்தார் உய்திபெறும் வண்ணம் வையத்து வாழ்வாங்கு வாழ்தற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியுள்ளார், இச்செய்தி,

'சமயக்கணக்கர் மதிவழி கூறாது

உலகியல் கூறிப்பொருளிது வென்ற வள்ளுவன்’ (கல்லாடம் 14)

எனவும்,

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி' (திருவள்ளுவமான்ல 9)

எனவும் வரும் ஆன்றோர் வாய் மொழிகளால் இனிது புலனாகும்.

பல சமயத்தவரும் தத்தமக்குரிய மறைநூலாக மதித்துப்போற்றும் நிலையில் உலக வாழ்க்கையில் அனைவர்க்கும் பயன் தரும் நல்லறங்கள் எல்லாவற்றையும் நடுநிலையில் நின்று அறிவுறுத்தும் பொதுநூலாக விளங்குவது திருக்குறள் என்னும் உண்மையினைச் சமயவேறுபாடின்றி எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் இப்பொதுமையுணர்வொன்றினையுமே கருதி ஒன்றோடொன்று முரண்பட்ட சமயக்கொள்கைகள் யாவும் திருக்குறள் நூலாசிரியராகிய திருவள்ளுவர்க்கு உடன் பாடாவனவே எனக் கூறத்துணிவார் எவரும் இலர். சமயவாதிகளுள் கடவுள் உண்டு என்னும் கொள்கை யுடைவர்களும் கடவுள் இல்லை என்னும் கொள்கை யாளர்களும், உயிர்கள் உள என்பாரும் இல என்பாரும்,