பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

427


பொருளில் ஆதி என்னும் சொல் சக்தியாகிய அன்னையைக் குறிக்கும் காரணப் பெயராயிற்று. ஆதி என்ற சத்தியை ஒருபாகத்திற்கொண்டவன் இறைவன் என்பார் ஆதிபகவன்’ என்றார் திருவள்ளுவர். சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1-115-4) எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தொடர் ஆதிபகவன் என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை அரியத்தகுவதாகும். எல்லாம் வல்ல இறைவனை அம்மையுடன் அமர்ந்த அப்பனாகப் பெண்னொரு பாகனாகக் கருதிப்போற்றும் முறை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வரும் தெய்வ வழிபாட்டு மரபாகும். இம்மரபு

"நீலமேனி வாலிழை பாகத்து

ஒருவன்” (ஐங்குறுநூறு,கடவுள் வாழ்த்து)

எனவும்,

“பெண்ணுருவொரு திறனாகின்று அவ்வுரு

தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கும்”

(புறநானுாறு.கடவுள்வாழ்த்து)

எனவும்,

"ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே’

(அகநானுாறு.கடவுள் வாழ்த்து)

எனவும் வரும் சங்கச் செய்யுட்களிலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கிய முற்றுணர்வின னாகிய இறைவன் உலகப்பொருள்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்துநிற்கும்நிலையில் சிவம் (அப்பன்) எனவும் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உலக உயிர்களொடு கலந்து நிற்கும் நிலையில் சத்தி (அம்மை) எனவும் ஒருமையின் இருமையினாய (தாதான்மிய சம்பந்தத்தால் இருதிறப்பட்டு) உலகினை இயக்கி நிற்றல் பற்றி அம் முதல்வனை ஆதிபகவன் (அம்மையப்பன்) எனத் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். இறைவன் அம்மையப்பனாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக்காத்து அழித்து மறைத்து