பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அவர் என்றார்.

அம்மையப்பராகிய இறைவர், தன்னிற்பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளுதலாகிய பொதுவியல்பும், இவ்வாறு உலகுயிர்களோடு பிரிவறக்கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தான்எய்தலின்றி இவை யெல்லா வற்றையுங் கடந்து சிந்தனைக்குரிய சிவமாகித்தனித்து மேற்பட்டு விளங்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குனர்த்துவது திருக்களிற்றுப்படியார் முதற்பாட லாகும். இது திருக்குறள் முதற்பாடலிலமைந்த 'ஆதிபகவன் முதற்றேயுலகு என்னுந் தொடரால் உணர்த்தப்படும். இறைவனது பொதுவும் சிறப்புமாகிய இருவகை இலக்கணங் களையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை இங்கு ஊன்றி நினைக்கத்தகுவதாகும்.

திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறிவாழியந்தனன், எண்குணத்தான் என்பன எல்லாம்வல்ல கடவுளுக்குரிய திருப்பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் எண்குணத்தான் என்ற பெயர் இறைவனுக்கே சிறப்புரிமை யுடைய குணங்கள் எட்டு என்பதனைப் புலப்படுத்துவதாகும். "எண்குணங்களாவன தன்வயத்தனாதல், தூயவுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் முதல் விளக்கம் எண்குணத்தான் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்குச் சிறப்புரிமையுடையது என்பதனை நன்கு வலியுறுத்துவதாகும்.

எல்லா நூல்களையுங் கற்றவர்க்கு அக்கல்வியறிவினா லாய பயன் ஞானமேயுருவாகிய இறைவன் திருவடிகளைத் தொழுது போற்றுதலேயாகும் எனவும், மெய்ந் நூல்கள் பல