பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“ஊனத்திருள் நீங்கிட வேண்டில்

ஞானப்பொருள் கொண்டடி பேணும்’ (1-38-3)

எனவரும் ஆளுடையபிள்ளையார் வாய்மொழியால் அறியப்படும்.

ஆன்மாக்களை ஆணவ இருளாகிய திரை அநாதியே மறைத்து நிற்றலால் மெய்ஞ்ஞானமாகிய பெரும் பொருளை யுனருந்தகுதி வாய்ந்த அறிவாகிய கண்ணின் ஒளியினை யிழந்து நுகர் தற்குரிய பொருள் எதனையும் அடையப் பெறாது, அதனை நாடிப் பெறுதற்குரிய உபாயத்தினையும் இழந்து ஒன்றும் புரியாத குருடர்களாய் மன்னுயிர்கள் தம்மை அணுத்தன்மைப்படுத்தி மறைத்து நிற்கும் ஆணவவிருளில் அழுந்தித்தடுமாறிய கேவல நிலையில் இருந்தன. பேரருளாள னாகிய இறைவனது திருவடியெனப்பெறும் திருவருட் சத்தியானது உயிர்களது இடர்நிலைக்கு இரங்கி, கொடிய நரகமெனப்படும் அவ்விருளாகிய துன்பக்குழியில் துயருறும் அவ்வுயிர்களைத் தன் அருளாகிய கையினைக் கொண்டு பற்றியெடுத்து ஈறிலாப்பேரின்பவாழ்வாகிய இன்பக்கரையிலே ஏற்றி உய்வித்தருள்கின்றது. இறைவன் மன்னுயிர்கட்குச் செய்யும் அருளுபகாரமாகிய இந்நிகழ்ச்சியை,

"இருள்தரு துன்பப்படல மறைப்பமெய் ஞானமென்னும்

பொருள்தரு கண்ணிழந்துண் பொருள்நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக்கொடு நரகக்குழிநின் றருள்தருகை கொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலமே”

எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் விரித்து விளக்கியருள்கின்றார்.

இத்திருவிருத்தத்தின் சொற்பொருளமைதியைக் கூர்ந்து நோக்குங்கால், திருவள்ளுவர் கூறிய 'இருள்சேர் இருவினை என்ற தொடரில் 'இருள் என்றது, மெய்யுனர் வினைப் பெறவொட்டாது உயிர்களின் அறிவுக்கண்னை மறைத்து அணுத்தன்மைப்படுத்தி நிற்கும் ஆணவம் எனப்படும் இருள் மலத்தினையே என்பதும்,தோற்றமில் காலமாக உயிர்களைப் பிணித்துள்ள அவ்விருள்படல