பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

457


அறிவில்லாததாய் உள்ள உடம்புக்கும் ஏற்பட்ட தொடர்பு அன்பு என்னும் உயிர்ப்பண்பினை வளர்த்தற்பொருட்டு ஏற்பட்டதாகும் என்பார்.

« & - A- * - - -

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்பொ டியைந்த தொடர்பு” (திருக். 73)

என்றார் திருவள்ளுவர். காணுதற்கரிய அருவாகிய உயிர்க்கு உருவாகிய எற்புச் சட்டமாகிய உடம்போடு உண்டாகிய தொடர்ச்சி அன்பு என்னும் உயிர்ப்பண்பினோடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்’ என்பது இதன் பொருளாகும். அருவாகிய உயிர்கள் உருவாகிய உடம்பொடு கூடியல்லது அன்பு செய்யலாகாமையின் அன்பினை வளர்த்தற் பொருட்டே உயிர்க்கு உடம்பொடு கூடிய இத்தொடர்ச்சியுளதாயிற்று என்பதாம். ஆகவே உயிர் உடம்பினைப் பெற்றதன் பயன் அன்புடைமை என்பது கருத்து. ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்ப" எனச் சான்றோர் கூறுவர். எனவே மன்னுயிர்கள் எற்புச் சட்டமாகிய உடம்பின் தொடர்ச்சி பெறாது இருள்நிலையி லிருந்த காலமும் உண்டு என உய்த்துணர வைத்தாராயிற்று. உயிர்கள் உடம்பின் தொடர்ச்சி பெறாது தனித்திருந்த இருள்நிலையினைக் கேவலநிலை எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன.

உயிர்கள் உடம்ப்ொடு கூடி உலக நுகர்ச்சியைப் பெற்று வாழும் நிலையினைச் சகலநிலை எனச் சைவ சித்தாந்தம் கூறும். இந்நிலை உயிர்வேறு உடம்பு வேறு எனப் பிரித்துணராதவாறு உடம்பும் உயிரும் ஒன்றிவாழும் நிலையாகும். இந்நிலையில் உயிருக்கும் உடம்புக்கும் அமைந்த தொடர்பினை,

"உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன

மடந்தையோ டெம்மிடை நட்பு” (திருக். 1122)

என வரும் திருக்குறளில் ஆசிரியர் உவமை முகத்தால் விளக்கியுள்ளார். தலைமகன் தலைவியெனத் தனக்குள்ள