பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

469


அனாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்தவுடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப்பின்னும் அனபவிக்கக் கடவனவாய்க்கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், அழித்துச் சார்தரா என்றார். . . . . . பிறப்பிற்குக் காரணமாகலான் நல்வினைப் பயனும் நோயெனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளையுணரப் பிறப்பறும் என்றார். அஃது அறும் வழிக்கிடந்த துன்பங்களெல்லாம் என்செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞானயோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாராமாட்டாமையானும் வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் என்பது இதனாற் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம். மெய்யுணர்தல் என்னும் இவ்வதிகாரத்திற் கூறப்படும் கருத்துக்கள் யாவும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருளுண்மையை வற்புறுத்தும் சைவ சித்தாந்தக் கொள்கையினர்க்கே முற்றிலும் பொருந்துவனவாதலை நன்கு புலப்படுத்துகின்றது.

மேற்கூறியவாறு சார்புணர்ந்து சார்புகெட வொழுகுதலாகிய ஞானயோகங்களின் முதிர்ச்சி யுடையார்க்கு விழைவு, வெறுப்பு, மயக்கம் என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூட அறவே கெடுதலால் அவற்றின் காரியமாகிய வினைப்பயன்கள் அவர்க்குச் சிறிதும் உளவாகா என அறிவுறுத்துவது,

44 - * - - s

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய்” (திருக். 360)

எனவரும் திருக்குறளாகும்.

மக்கள்பால் அமைந்த காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களுள் ஏனையிரண்டிற்கும் அடிப்படை யாகஅமைந்தது மயக்கம். இது ஒன்றும் அறியாமையாகிய பேதைமை எனவும், தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்துப் பெரியோரை அவமதித்தொழுகும் புல்லறிவாண்மையும் என இருவகைப்படும். இவ்