பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மாமுகடி - கரிய நிறத்தாளாகிய மூதேவி, சேட்டை. தாமரையினாள் - திருமகள், இங்கு எடுத்துக் காட்டிய குறள்களால் மக்கள் நன்முயற்சியாலடைதற்குரிய செல்வத் திற்குத் தெய்வம் திருமகள் என்பதும் சோம்ப லடைதற்குரிய வறுமைக்குத் தெய்வம் திருமகளின் தமக்கையாகிய சேட்டை என்பதும் திருவள்ளுவர் காலத்திற்கு முற்றொட்டுவரும் நம்பிக்கையாதல் நன்கு விளங்கும்.

சோம்பல் இல்லாத மன்னன் மண்ணுலகும் வானுலகும் ஆகிய உலகம் முழுவதனையும் தனது ஆட்சியின் கீழ் வைத்து ஆளும் ஆற்றலையும் சிறப்பினையும் பெறுவான் என மடியின்மை சோம்பலின்மையாகிய இடையறா முயற்சியின் பெரும்பயனை வற்புறுத்துவது,

‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயதெல்லாம் ஒழுங்கு (திருக். 610)

எனவரும் திருக்குறளாகும். சோம்பல் இல்லாத மன்னன் தன் அடியின் அளவினாலே எல்லாவுலகங்களையும் தாவி அளந்த இறைவனாகிய திருமால் கடந்து பெற்ற உலகப் பரப்பு முழுவதனையும் பெறுவான்’ என்பது இதன் பொருள். இதன்கண் அடியளந்தான் என்றது, 'மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பாவகை முடியத்தாவிய சேவடி யுடையனாகிய திருமாலை. தாஅயது என்றது, அம்முதல்வன் குறளுரு வாகிய வாமனவடிவாய் மாவலி என்னும் அசுரமன்னன் பாற்சென்று தன் காலடியால் மூவடிமண் இரந்து பெற்று, யாவர்க்கும் அடங்காத பெருவன்மை படைத்த மன்னனைத் தன் அடிக்கீழ் அடக்கிக் கவர்ந்து கொண்ட மூவுலக மரபினை. காத்தற்கடவுளாகிய திருமால் உலகவுயிர்களை உய்வித்தல் கருதித் தன்னருளால் மேற்கொண்ட அருட்பிறப்புக்கள் பத்தினுள் ஒன்றாகிய வாமனாவதாரமாகிய புராணச்செய்தியினை இத்திருக்குறளில் திருவள்ளுவர் குறித்துள்ளமை காணலாம்.

திருக்குறள் காமத்துப்பாலில்,

‘தாம்வீழ்வார் மென்றோட்டுயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு" (திருக்.1103)