பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

513


'மருதில் நடந்துநின் மாமன்செய் வஞ்சம்

உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்'

எனக் கொற்றவையைத் திருமாலாகவே கருதிக் கஞ்சன் செய்த வஞ்சனையைக் கடந்த கண்ணன் செயலைக் கொற்றவை மீதேற்றிப் போற்றுகின்றனர். திருமர்லைக் குறித்த மாயவன் என்ற பெயரும் கொற்றவையைக் குறித்த மாயவள் என்ற பெயரும் ஒரே முதனிலையில் தோன்றினவை. இக்குறிப்பினால் சிவசத்தியில் ஒன்றாகிய புருஷசத்தியே திருமால் என்னும் குறிப்பினை அக்காலச் சைவர் கொண்டிருந்தமை புலனாகும். இதனை 'மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதர் என வரும் திருஞான சம்பந்தர் வாய்மொழியும் வற்புறுத்தல் காணலாம்.

கோவலன், பாய்கலைப்பாவை மந்திரத்தை ஒதுமியல் புடையவன் என்றும், அம்மந்திரத்தால் காட்டில் மயக்குந் தெய்வத்தை ஆற்றல் கெடச் செய்தனனென்றும் மதுரை நகர்க்கருகேயமைந்த சிற்றுாரில் மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் பாடிய பாய்கலைப் பாவை பாடற் பாணியினைக் கேட்டு மகிழ்ந்தனனென்றும் சிலப்பதிகாரம் கூறுதலால், கொற்றவை வழிபாட்டில் கோவலன் நம்பிக்கையுடையவன் என்பது நன்கு விளங்கும். இறைவனை 'ஆடல் கண்டருளிய அணங்கு எனப் பத்திரகாளியையும், 'அடர்த்தெழு குருதியடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேற்றடக்கைக் கொற்றவை எனத் துர்க்கையையும், அறுவர்க்கிளைய நங்கை எனச் சத்த மாதர்களில் ஒருத்தியாகிய பிடாரியையும் அடிகள் குறித்துள்ளார். மதுரை நகரத்தே கொற்றவைக்குக் கோயிலிருந்தமையும், அக்கொற்றவை கோயில் வாசலில் கண்ணகி பொற்றொடி தகர்த்தமையும் அடிகள் குறிப்பிடுவர். உலகுக்கு இடர்செய்யும் அவுனரொடு துர்க்கை செய்த ப்ோரிலே அவுனர் பாம்பு தேள் முதலிய உருவில் வஞ்சனையால் வந்து எதிர்க்க, அது பொறாளாகி மரத்தினால் கால் கட்டிக் கொண்டு ஆடி அவற்றைச் சிதைத்த ஆடல், மரக்கால் ஆடல் எனப்படும். இதனை,

சை. சி. சா. வ. 33