பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'காய்சின அவுனர் கடுந்தொழில் பொறாஅள்

மாயவள் ஆடிய மரக்காலாடல்

என்று குறிப்பிடுவர் அடிகள்.

சிவவழிபாடு

இவ்வழிபாடு எல்லா நிலத்துக்கும் பொதுவாக வுரியது. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில்

'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மை யின்வழா நான்மறை மரபின் தீமுறை யொருபால் நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வேறு தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால் அறவோர் பள்ளியும் அறனோம் படையும் புறநிலைக் கோட்டத்துப்புண்ணியத் தானமும் திறவோ ருரைக்குஞ் செயல்சிறந்த தொருபால்’

சிறந்து விளங்கின எனவும், பாண்டிய நாட்டு மதுரை நகர்ப் புறத்தே அருந்தெறற் கடவுளாகிய திருவாலவாய்ப் பெருமான் திருக்கோயிலில் ஒதிய நான்மறையோசையும், மாதவர் கூறிய பொருளுரையும் முழுங்கின எனவும், மதுரை நகரிலே

நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

விளங்கின எனவும் சிலப்பதிகாரம் கூறும். பிறவா யாக்கைப்