பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருமாமணியெனத் தெய்வமுற்றுரைப்ப"

எனவரும் தொடரில் தெய்வத்தால் போற்றப்படும் சிறப்பு கண்ணகியார்பால் அமைந்திருத்தலை அடிகள் விளக்கினமை காணலாம். வீட்டைவிட்டுப் புறப்படாத மெல்லிய இயல்பினையுடைய கண்ணகியார், தம் கணவன் கோவலனோடு மதுரைக்குச் சென்ற காலத்து, ஞாயிற்றின் கொடிய வெம்மையினால் துன்பமுற்ற தம் கணவன் பொருட்டுத் தாம் கண்டார் நடுங்கத் தக்க துன்பத்தை யடைந்து, நாப்புலர வாட்டமுற்று வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் நினையாது மகளிர்க்கு இன்றியமையாத கற்பாகிய கடமையினை மேற்கொண்ட திறத்தை, அவர்களுடன் துணையாக வந்த சமணத் துறவியாராகிய கவுந்தியடிகள் நேரிற் கண்டவராதலின், கற்புக்கடம் பூண்ட இக்கண்ணகி யாகிய தெய்வத்தைத் தவிர வேறு தெய்வத்தைத் தாம் காணாமையினை மாதிரியாகிய ஆயர்மகளிடம் எடுத்துரைக் கின்றார். அப்பகுதி,

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மக ளறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுயரெய்தி நாப்புலர வாடித் தன்றுயர் காணாத்தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக் கற்புக் கடம்பூண்டஇத் தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண்டிலமால்”

என்பதாகும். இதனால் துறவிகளாலும் போற்றத்தகும் சிறப்பு கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியின்பால் அமைந்த இயல்பினை அடிகள் நன்கு விளக்கினமை காணலாம்.

பிறதெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கணவனையே தொழுது துயிலெழும் இயல்புடைய கற்புடைய மகள் பெய்யென்று சொல்லிய அளவிலே மழை பெய்யும் என்பதையும், இங்ங்னம் கணவனைப் பேணி வழிபடும் மகளிர் இவ்வியல்பினைத் தமக்குரிய கடமையாகப் பெறுவராயின், அவர்கள் தேவர்கள் வாழும் உலகிலே