பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சமய நுண்பொருள்களை உறுதிப்படுத்திக் கூறுந்திறத்தில் ஏனைய சமயவாதிகளுடன் உறழ்ந்து (வாதிட்டு) ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்து தத்தம் சமயமே அமைவுடையதாக நிலைநிறுத்தும் தருக்கநெறிமுறையும் சொல்வன்மையும் உடையவர்களாக விளங்கினார்கள் என்பதனையும் அன்னோர் பட்டிமண்டபத்து ஏறியமர்ந்து பலவாறாக விரித்துக் கூறுவனவற்றையெல்லாம் அமைதியாகவிருந்து கேட்டு மகிழும் நிலையில், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” எனத் தெய்வப்புலவர் அறிவுறுத்திய வண்ணம் பல சமயத் தத்துவநுட்பங்களையும் இகலின்றிக் கேட்டுனரும் மெய்யுணர்வு வேட்கையுடையராய் விளங்கினார்கள் என்பதனையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்த து;

భశ

ஒட்டிய சமயத்துறு பொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின் பற்றாமாக்கள் தம்முடனாயினும் செற்றமுங்கலாமுஞ் செய்யாதகலுமின்” (மணி. க. 90-93)

எனவரும் விழாவறை காதைப் பகுதியாகும்.

மணிமேகலையாசிரியர் சாத்தனார் தம் காப்பியத்துள் புத்த சமய வுண்மைகளையே விரித்துரைக்கும் குறிக்கோள் உடையவராயினும் தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளையே கருவாகக் கொண்டு தம்மால் இயற்றப்பெறும் தமிழ்க்காப்பியம் தமிழகத்திற் பெரும்பான்மையினராகவுள்ள சைவர் வைணவர் முதலிய ஏனைச் சமயத்தோராலும் போற்றிப் பயிலப்பெறுதல் வேண்டும் என்னும் விருப்புடையராய்த் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற் று வழங்கும் சிவன், திருமால், முருகன், நான்முகன், கொற்றவை, திருமகள், முதலிய தெய்வங்களைப் பற்றிய செய்திகளையும் வழிபாடு களையும் ஆங்காங்கே குறித்துள்ளமை காணலாம்.

ஆலமர் செல்வன் மகன் (முருகன்)

ஆலமரநிழலில் அமர்ந்திருந்து முனிவர்க்கு அருமறைப் பொருளை யறிவுறுத்திய முதல்வன்