பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருமகள்

திருமாலின் தேவியாகிய திருமகள் தாமரை மலரில் வீற்றிருந்தருள்பவள் என்பதும் பொன்னிறத் திருமேனியினை யுடையவள் என்பதும்,

“விரைமலர்த்தாமரையொரு தனியிருந்த

திருவின் செய்யோள் போன்று” (மணி. 16. 33-34)

எனவும், பொன்னேரனையாய் (மணி. 2.16) எனவும் வரும் தொடர்களாற் புலனாம். வானாசுரன் தன் மகள் உழை காரணமாக அநிருத்தனைச் சிறைப்படுத்திய நிலையில் அவனையழித்தற் பொருட்டுத் திருமால் மேற்கொண்ட போரில் திருமகள் அசுரர்கள் மயங்கி மூர்ச்சித்து விழும்படி கொல்லிப்பாவை வடிவு கொண்டு ஆடிய கூத்து பதினோராடல்களுள் ஒன்றாகிய பாவைக்கூத்தாகும். இதனை,

"திருவின் செய்யோள் ஆடியபாவையும்” (மணி.5.4)

என்ற தொடரால் ஆசிரியர் குறித்துள்ளார்.

திருமால் மகன் காமன்

வானாசுரனுடைய பேரூராகிய 'சோ' என்னும் நகரத் தெருவில் நீன் நிலம் அளந்த திருமாலின் மகனாகிய காமன் ஆண்மை திரிந்த பெண்மைக்கோளமுடையனாய் ஆடிய ஆடல் பதினோராடல்களுள் ஒன்றாகிய ‘பேடு" என்னும் கூத்தாகும்.

"வாணன் பேரூர் மறுகிடை நடந்து

நீணில மளந்தோன் மகன் முன் ஆடிய பேடிக்கோலத்துப்பேடுகாண்குநரும்” (மணி.3. 123-125)

என மணிமேகலை மலர்வனம் புக்க காதையில் இக்கூத்துக் குறிப்பிடப்பெற்றுள்ளமை காணலாம். 'காமனுக்கு வானில் உலவும் தென்றற் காற்றாகிய தேரும் மீன்கொடியும் கரும்பு வில்லும் மலர்க்கனையும் உரியன என்பது,