பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

567


கவச நியாசங்கள் முத்திரை, பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம், பூரகம், கும்பகம், ரேசகம் என்றாற்போலும் வடசொற்களும் தொடர்களும், அக்காலத்திற் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் ஆங்காங்கே இடம் பெறுவனவாயின. தமிழ் வடமொழி யென்னும் இருமொழி களையும் கலந்து திருமூலர் தாமே படைத்துக்கூறிய அணுவன் (திருமந். 2051), மாயாள் (399) என்றாற்போலும் புதுச்சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. வேத சிவாகமங்களின் முடிந்த முடிபாகிய சைவம் என்ற பொருளிற் சித்தாந்தம் என்ற வடசொற் றொடர் திருமூலர் திருமந்திரத்திலேதான் முதன்முதலாகக் காணப்படுகின்றது. சுந்தரர் காலத்துப் பல்லவ வேந்தனாகிய இரண்டாம் நரசிங்கவர்மன் தான் காஞ்சியில் எடுப்பித்த கயிலாயநாதர் கோயிலிற் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில் சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றியவன் எனத் தன்னைக் கூறிக் கொள்கின்றான். இம்மன்னன் - திருமூலநாயனார் காலத்திற்குப் பின் தோன்றியவன் ஆதலின் இவன் பின்பற்றிய சைவசித்தாந்தம் என்பது திருமூலர் திருமந்திரத்தில் விரித்துக் கூறப் பெற்றுள்ள சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கையே எனக் கருதுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும்.

ஆரியமும் தமிழுமாகிய இருமொழிகளையும் நன்கு தேர்ந்து குமரி முதல் இமயம் வரை போக்குவரவு புரிந்த சிவயோகியாராகிய திருமூலர் அருளிய திருமந்திரத்தில் இருமொழிக்கும் பொதுவாகிய சமய சாத்திரக் குறியீடுகளும் பொதுமக்களிடையே பயின்ற வழக்குச் சொற்களும் விரவிக் காணப்படுதல் இயல்பு. ஆகவே திருமந்திரப் பாடல்களின் சொல்லமைப்பு ஒன்றே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மையினைக் குறித்து ஐயுறுதற்குச் சிறிதும் இடமில்லையென்க:

திருமந்திர நூலமைப்பு

திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம், தமிழ்ச்