பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சிவாகமம் என்பதனை அறிஞர் பலரும் நன்கறிவர். சிவாகமங்கள் தந்திரம், மந்திரம், உபதேசம் என்னும் மூவகை உரையளவைகளையும் உறுப்பாகக் கொண்டன. அவற்றுள் தந்திரகலையாவது, வேத சிவாகமங்களின் வகையாகிய கரும காண்டம் ஞானகாண்டம் உபாசனா காண்டம் என்னும் மூன்றனுள் கருமகாண்டம் பற்றி முன்னொடுபின் மாறுகோளின்றி அனுட்டித்தலை அறிவுறுத்துவது. மந்திரகலை என்பது, உபாசனாகாண்டம் பற்றி மன முதலிய அடக்கித் தெய்வத்தை வழிபடு முறையினை விரித்துரைப்பது. உபதேச கலை என்பது ஞானகாண்டம் பற்றித் தனக்கு முதலும் முடிவுமில்லாத இறைவன் தன்னின் வேறல்லாத எண்குனங்களையுடையனாதல், தன்னின் வேறாகிய பசு பாசங்களையுடையனாதல் முதலிய இறைவனுடைய இயல்புகளைத் தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்து மாறும் விளங்க அறிவுறுத்துவதாகும். இனி, ‘சாத்திரங்களை முன்னொடுபின் மலைவறக் கொள்ளுகிறது தந்திரகலையாம் என்றும், கரணங்களுடைய வியாபாரங்களை அடக்கி அவரவர் தங்களுக்கு வேண்டின தெய்வங்களை அந்தந்த மந்திரங்களினாலே வழிபடுகிறது மந்திரகலையாம் என்றும், தனக்கு முதலும் முடிவுமில்லாத பரமேசுவரனுடைய சிவஞானத்தைப் பக்கு வான்மாக்களுக்குப் போதிப்பது உபதேசகலையாம் என்றும் ஞானகாண்டம் ஒன்றே பற்றி இம்மூவகைக் கலைகளின் இலக்கணங்களைப் பகுத்துரைத்தலும் ஏற்புடையதேயாகும். ஆகமங்களுக்கு அங்கமாகிய இம்மூவகை உரையளவைகளையும்,

“அனாதியேயமலனாய அறிவனுாலாக மந்தான்

பினாதிமாறின்றிப் பேணல் தந்திரம், மந்திரந்தான்

மனாதிகளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மையாகும்

தனாதியிறிலான்தன் தன்மை யுணர்த்துதல்

உபதேசந்தான்” (சித்தியார். சுபக்கம்.13)

எனவரும் திருவிருத்தத்துள் அருள்நந்தி சிவாசாரியார் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளார்.

மேலே கூறப்பட்ட தந்திரம் மந்திரம் உபதேசம் என்னும் மூவகை உரைத்திறங்களும் ஒருங்கமைந்த