பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

571


மந்திரச் செய்யுளை அங்கதப்பாட்டு எனவும் வசைப் பொருளில் வாராது உலக நலங்குறித்து வரும் மறைமொழி யினையே மந்திரம் எனவும் வழங்குதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு விளங்கும். திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளிய இத் திருமந்திரமாலை முற்குறித்த தொல்காப்பிய இலக்கணத்தின்படி அமைந்த தமிழ் மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகத் திகழும் சிறப்புடையதாகும். ஊன் பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்’ (85) எனத் திருமூல நாயனாரும், சிவயோகமிகு மந்திரமாம் முறையொன்று எனத் திருமுறை கண்ட புராண ஆசிரியரும் இதனை மந்திரப்பனுவலாகக் குறித்துள்ளமை இங்கு நினைக்கத் தக்கதாகும்.

தமிழ் மூவாயிரமாகிய இந்நூல் பொருள் தொடர்பு உடையதாய் மாலை போன்று அமைந்திருத்தலின் இதனை 'முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரம் என்றார் சேக்கிழார். இறைவன் சிவயோகியாரது பண்டைய வுடம்பினை மறைப்பித்துச் சாத்தனூர் மூலனுடம்பில் நின்றவாறே திருவாவடுதுறையில் சிவயோகத்து அமரும் வண்ண்ம் செய்தருளியது, இறைவனூலாகிய சிவாகமங் களை இந்நிலவுலகில் தமிழால் வகுத்தருளிச் செய்ய வேண்டும் என்னும் திருவுளக்குறிப்பினாலேயென்பதும் இத்திருவருட் குறிப்பினையுணர்ந்த திருமூலர் திருவாவடு துறையில் அம்மையப்பரை வணங்கிச் சிவயோகத் தமர்ந்து தமிழாகமம் ஆகிய இத்திருமுறையினை அருளிச் செய்தார் என்பதும்,

"தண்ணிலவார் சடையார் தாம்தந்த ஆகமப்பொருளை

மண்ணின் மிசைத்திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க எண்ணிறைந்த வுணர்வுடையார் ஈசரருள்

எனவுணர்ந்தார்” (பெரிய திருமூலர்)

எனவரும் சேக்கிழார் வாய்மொழியாலும்,

"சிந்தைசெய்தாகமஞ் செப்பலுற்றேனே" (திருமந், 73)

எனவும்,