பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

595


முதல்வனாகிய அப்பனோடு அம்முதல்வனின்றும் பிரிக்க வொண்ணாத அருளாகிய அம்மைக்கு உள்ள தொடர் பினைத் தத்துவநெறியில் விளக்கும் முறையில் உருவக அணிநலந்தோன்றத் திருமூலநாயனார் அருளிய திருமந்திரப் பொருளை உளங்கொண்ட திருவாதவூரடிகள்,

4% - -- - - - -

எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்”

(திருவாசகம், திருப்பொற்சுண்ணம் 13)

எனவும்,

“தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் தன்னொருபா

லவள் அத்தனாம் மகனாம் தில்லையான்”

(திருக்கோவையார் 12)

எனவும் இறைவனை உமையம் மையுடன் உறவுமுறை குறித்தும் போற்றியருளினார். திருமூலநாயனார் சைவ சித்தாந்தத்தின் சிறப்புடைய தத் துவங்களாகக் கண்டுணர்த் திய சுத்த தத்துவத் தோற்றம் பற்றிய இவ்வுருவகத்தின் கருத்தினை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது,

“சிவம்சத்தி தன்னையின்றும் சத்திதான் சிவத்தையின்றும்

உவந்திருவரும் புணர்ந்திங் குலகுயிரெல்லா மீன்றும் பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னியாகும் தவந்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே"

(சிவஞான சித்தியார் சுபக்கம் 166)

எனவரும் சிவஞான சித்தியாராகும்.

“கனகமார் கவின்செய் மன்றில் அனகநாட கற்கெம் அன்னை

மனைவிதாய் தங்கை மகள்” (சிதம்பரச் செய்யுட்கோவை)

தாய த

எனவரும் குமரகுருபரர் பாடலும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

முழுமுதற்பொருளாகிய இறைவன் புறமாகிய