பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லையூர்புகலாமே" (1568)

என வரும் திருமந்திரமாகும். “இறைவனையடைதற்கு வகுக்கப்பெற்ற சமய நெறிகளில் இதுவே தவநெறி, அதுவே தவநெறி என இருவகையாக வேறுபடுத்திப் பேசும் மன மயக்கமுடைய சமயவாதிகளைக் கண்டால் எங்கள் குரு முதல்வராகிய சிவபெருமான் அவர்தம் பேதைமையினை யெண்ணித் தன்னுள்ளத்துள்ளே நகுவான். மக்கள் மேற்கொண்ட தவநெறியாகிய சமயம் எதுவாயிருந்தால் என்ன? அத்தவமுடையோர் எந்த நாட்டில் எந்த இனத்திற் பிறந்தால் என்ன? எல்லா நெறிகளும் இறைவனையடைந்து உய்தி பெறுதற்கு அமைக்கப் பெற்றனவே என்னும் உண்மையினை யுடன்பட்டுப் பிணக்கின்றி இறைவனை யுணர்ந்து போற்றுவார்க்கு விரைவிற் சிவமாநகர் எனப்படும் வீட்டினையடைதல் மிகவும் எளிதாம்” என்பது இதன் பொருளாகும்.

“எங்கேனும் யாதாகிப்பிறந்திடினுந் தன்னடியார்க்கு

இங்கேயென்றருள் புரியும் எம்பெருமான்”

என ஆளுடையபிள்ளையாரும்,

“ஆறு சமயத்தவரவரைத்தேற்றுந்தகையன”

என ஆளுடைய அரசரும்,

"அறிவினான் மிக்க அறுவகைச்சமயம்

அவ்வவர்க்கங்கே யாரருள் புரிந்து”

என ஆளுடையநம்பியும்,

“வேறுபடு சமயமெலாம் புகுந்துபார்க்கின்

விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால்

மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா”

எனத் தாயுமானாரும்,