பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அழல்சேரும் அங்கியுள் ஆதிப்பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங்குலைந்ததே (1600)

எனவரும் திருமந்திரமாகும். "வீரக்கழல் பொருந்திய செந்தாமரைமலர் போலும் இறைவன் திருவடியாகிய நிழலைச் சேரப்பெற்றேன். உலகினையளந்த நெடியோ னாகிய திருமாலாலும் அறியவொண்ணாத வெம்மை பொருந்திய தீப்பிழம்பினுள் விளங்கிய முதல்வனாகிய சிவபெருமானும் அற்புதமான அமுத தாரைகளாக எனதுடம்பின் எற்புத் துளைகள்தோறும் வந்து சேர்ந்தான். (அதனால்) அழியுந்தன்மையாதாகிய என்னுடம்பில் வைத்த பற்றும் சிதைந்தழிந்தது” என்பது இதன்பொருள். குழல்நரம்பின்துளை. ஆதிப்பிரான் குழல் (தோறும்) சேரும். அதனால் உயிர்க்கூடும் குலைந்தது என்க.

"அற்புதமான அமுத தாரைகள்

ஏற்புத்துளைதொறும் ஏற்றினன், உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச்செய்தாங்கு எனக்கு அள்ளு றாக்கை யமைத்தனன்”

எனவும்,

"அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்”

எனவும் வரும் திருவாசகத்தொடர்களும்,

“சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்போதடித் தொண்டர்

துன்னும் நிழலாவன என்றும் நீங்காப்பிறவிநிலை கெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ காலவனங் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே”

என அப்பரடிகள் அருளிய திருவிருத்தமும் இங்கு ஒப்புநோக்கியுணரத்தக்கனவாகும்.

கழல் என்பது, வீரர்கள் தமது வெற்றிக்கு அடையாள மாகக் காலில் அணிந்து கொள்ளும் அணியாகும். அழல்சேரும் அங்கியுள் ஆதிப்பிரான் ஆயினும் அவனுடைய திருவடி குளிர்ந்த நிழலைச் செய்யும் என்பது ஒர்நயம்.