பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

625


எனவரும் சேக்கிழார் வாய்மொழி, மேற்குறித்த திருமந்திரப் பொருளை அடியொற்றி யமைந்ததாகும்.

சிவனை வழிபடுவோர் குருவின்பால் உபதேசம் பெற்று மனமொழி மெய்களால் தூய்மையுடையராய் நல்லொழுக்க நெறியில் ஒழுகும் மரபுவழி வந்த வழிபாட்டு முறைகளை யுணர்த்துவது, சம்பிரதாயம் என்ற பகுதியாகும்.

“உடல்பொருள் ஆகி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக் கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே” (1778)

எனவரும் திருமந்திரம் ஆசிரியன் மாணவனுக்குத் தீக்கை செய்து உபதேசித்தருளுந்திறத்தை உணர்த்துகின்றது. ‘நந்தியாகிய சிவபெருமான், பக்குவமுடைய மாணவனது படர்ந்த வினைத்தொடர்பு அற்று நீங்கும்படி அவனை அருட்கண்ணால் நோக்கி அவனது தலையின்மேல் தன் கையை வைத்து, விரைவில் தனது திருவடியை அவனது முடிமேற்குட்டி, நுண்ணுணர்வாகிய சிவஞானத்தை உபதேசித்தருளி, அம்மாணவனுடைய உடல் பொருள் உயிர் அனைத்தையும் அவன் வார்த்த நீருடன் தன்னுடைமையாக ஏற்றுக்கொண்டு, விரைந்துவரும் வெள்ளம் போன்று தொடர்ந்து வரும் பிறவி அற்றொழியும்படி நன்னெறியைக் காட்டிய ருளினன்” என்பது இதன் பொருளாகும்.

நந்தி, பார்த்துக் கைவைத்து அடிவைத்து, நுண்ணுணர்வாக்கி, உடல் பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு, பிறப்பு அறக்காட்டினன் என இயைத்துப் பொருள் கொள்க. நந்தி - சிவன், பார்த்தல், சr தீகூைடி. அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்’, ‘கண்ணால் நோக்கிக் காண்ணப்பர் பணிகொள்ளுங் கபாலியாரே' எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழிகள் திருக் கண்ணோக்கமாகிய இத்திக்கையினைக் குறிப்பனவாகும். கை வைத்தலு முடிமேல் அடிவைத்தலும் பரிசதிக்கையாகும். நுண்ணுணர்வாக்கி எனவே அவ்வுணர்வினைத் தோற்று வித்தற்குக் காரணமாகிய மானச தீக்கை. உடல்பொருள்

சை. சி. சா. வ. 40