பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

631


பகுதியாகும். சிவனடியார்களைச் சிவனெனவே கண்டு வழிபடுஞ் சிறப்பினை யுணர்த்துவது மகேசுவரபூசை என்பதாகும். இறைவனுக்குத் தாம் எக்காலத்தும் அடிமையே என்னும் தொன்மையினை யுணர்ந்து வழிவழி இறைவனுக்குத் தொண்டுபுரியும் சிவனடியாரது பெருமையினை யுனர்த்துவது அடியார் பெருமை என்ற பகுதியாகும். சிவனை வழிபடுவோர் உணவுண்னும் முறையினை உணர்த்துவது போசனவிதி. தான் உண்ணுதல் வேண்டும் தனக்கென்று உலையேற்றாமல் சமைக்கும்பொழுதே அடியார்க்கென்று சமைத்த உணவே விரும்பியுண்ணத்தக்க நல்லமிழ்தமாகும். பிட்சாவிதி என்னுந்தலைப்பில்,

“பரந்துல கேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பார்கள், எற்றுக் கிரக்கும் நிரந்தரமாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே’ (1888)

எனவரும் திருமந்திரம் இறைவன் பிச்சைத்தேவனாதற்குரிய காரணம் கூறுகின்றது.

‘விரிந்து பரவிய ஏழுலகங்களையும் படைத்தருளிய சிவபெருமானை இரந்து பிச்சையேற்று உண்பவன் என்று கூறுவர் (அறியாதார்). உலகெல்லாமுடையானாகிய அவ்விறைவன் எதற்காக இரத்தற்றொழிலை மேற்கொள்ள வேண்டும்? இடைவிடாது தன்னைத் தியானிக்கும் அடியார்கள் பிறர்பால் இரந்து அன்னோர் இட்ட வுணவினையுண்டு தன்திருவடியை அடையும் வண்ணம் இவ்விரத்தற்கோலத்தை மேற்கொண்டருளினான்’ என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.

இறைவனை இடைவிடாது போற்றுந் தொழிலின ராய சிவனடியார்கள் ஆக்கைக்கே இரைதேடி அலையாமல் அன்புடையாரது மனைக்கண் சென்ற அவர் உவந்தளிக்கும் உணவை அளவாக வுண்டு தன் பொன்னார்.திருவடியை அடைதற்பொருட்டே இைைறவன் பிச்சையேற்குந் தவ வேடத்தினைத் தான் மேற்கொண்டு தன்னடியார்க்கு வழிகாட்டியதல்லது, பசியும் பிணியும் பகையுமில்லாத ஈசன்