பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

641


மில்லாத போது மாயையும் சீவிப்பற்றுப்போம்” என்பர் சிவப்பிரகாசர். ஆணவம் உமியையும் கன்மம் முளையையும் மாயை தவிட்டையும் ஒக்கும் என உரை கூறுவாருமுளர். 'நெல்லிற் குமியும் நிகழ்செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே எனவரும் சிவஞான போத வெண்பாவில் வல்லி (மாயை)க்கு உவமையாக உமியும், ஆணவமலத்திற்கு உவமையாகக் களிம்பும் கூறப்படுதலால் சிவப்பிரகாசர் தந்த விளக்கமே பொருத்தமுடையதாகும். ஆணவத்துக்குத் தவிட்டினை உவமையாகக் காட்டுவர் உமாபதி சிவாசாரியார்.

ஆன்மாக்கள் இறைவன் திருவருளால் உய்திபெறும் முறையினைப் பிறிதுமொழிதல் என்னும் அணிநலம் அமைய எடுத்துரைப்பது,

ść - - - - - -

t_i & &#&T -oxioséo பாலொரு 65}}&{ĦT&ĞĞI”łįy

பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல்போடிற் பசுக்கள் தலைவனைப்பற்றி விடாவே' (2193)

என வரும் திருமந்திரமாகும். “பசுக்களோ பலநிறத்தன. ஆயினும் அவற்றின் பாலானது வெண்மையாகிய ஒரே நிறமுடையதாகும். அப்பசுக்களைப் புலங்களிற் செலுத்தி மேய்ப்போனாகிய இடையன் ஒரே தன்மையன். பசுக்களை மேய்க்குந் தொழிலை மேற்கொண்ட ஆயன் தான் கையிற் கொண்ட கோலைக் கீழே போடுவானாயின் (முன்னர் அக்கோலினால் மொத்துண்டு பயந்து ஒடிய) அப்பசுக்கள் தம் தலைவனாகிய அவனை அன்பினாற் பற்றிச் சூழ்ந்து கொண்டு அவனை விட்டு நீங்கமாட்டா” என்பது இதன் பொருளாகும்.

பாசத்தாற் கட்டுண் டமையின் பசுவெனப்பெயர் பெற்ற உயிர்கள் ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானா கலர், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயா கலர், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர் எனப் பலதிறத்தனவாயினும் அவை யாவும் சார்ந்த தன் வண்ணமாந்தன்மையாகிய ஒரியல்பேயுடையன என்பார்,

ரை. சி. சா. வ. 41