பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வெறுப்பும் ஆதல் இன்றிப் புண்ணியபாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒட்ட நிகழ்தல்.

மல பரிபாகம் : ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற்குரிய துனைக் காரனங்கள் எல்லாவற்றோடும் கூடுதல்.

சத்திநிபாதம் : ஆணவமலத்திற்கு அனுகூலமாய் நின்று நடாத்திய திரோதான சத்தி ஆணவமலம் ஆன்மாவை விட்டுக்கழலும் பக்குவத்தினையடைந்தபோது கருணை மறமாகிய தன் செய்கை மாறிக் கருணை யெனப்படும் முன்னைப் பராசத்தி உருவாய் ஆன்மாக்களிடத்துப் பதிதல். சத்தி நிபாதம் - சத்தியது.வீழ்ச்சி. நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்றதோர் இடைச்சொல்.

ஆன்மா, இறைவனருளால் கேவலநிலையினின்றும் சகலநிலையை எய்திச் சுத்த நிலையை அடையுமாறு கூறுவது,

“மாயை கைத்தாயாக மாமாயையின்றிட

ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர் கேவல சகலத்தெய்தி ஆய்தரு சுத்தமுந் தான்வந்தடையுமே” (2268)

எனவரும் திருமந்திரமாகும். "எவ்விடத்துமாய் நீக்கமறக் கலந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான், அப்பனாக நின்று அருள்புரியப் பொருந்திய ஆன்மா, கத்தமாயை (தன்னைப் பிள்ளையாய்ப்) பெற, அசுத்தமாயை செவிலித் தாயாய் நின்று வளர்க்க, கேவலநிலையின் நீங்கிச் சகலநிலையையடைந்து (சிவஞானத்தால்) ஆய்ந்து தெளியப் பெறும் சுத்த நிலையையும் தான் வந்தடையும் என்பது இதன்பொருள்.

இறைவன் கேவலமாகிய இருள்நிலையிற் கிடந்த ஆன்மாவைச் சுத்தமாயையின் இடமாகத் தோன்றச் செய்து, அசுத்தமாயையைக் கொண்டு வளரச்செய்து, தூய்மைப் படுத்தித் தன் திருவடிக்கீழ்ச் சேர்த்தருள்வன் என்பது இதன்