பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

681


இருவேறுடம்புகளினின்றும் பிரிந்து செல்லுதலை விளக்குவதாக அமைந்தது,

"அரவுதன் தோலுரிவும் அக்கனவும் வேறு பரகாயம் போய்வருமப் பண்பும் பரவிற் குடாகாய ஆகாயக் கூத்தாட்டா மென்ப தடாதுள்ளம்போமாறது”

(சிவஞானபோதம், வெண்பா 14)

எனவரும் சிவஞானபோத வெண்பாவாகும். உயிர் உடம்பை விட்டுப் போதற்கு இவ்விரு வேறு உவமைகள் ஆகமங்களிற் கூறப்படினும் அரவுதன் தோலுரிவு முதலியன துல வுடம்பினை விட்டுப்போதற்கும் குடாகாயவுவமை சூக்கும வுடம்பை விட்டுப்போதற்கும் உவமையாக எடுத்தாளப் பெற்றன என இவற்றின் வேறுபாட்டினைத் தெளித்துனர்க என்பதாம்.

மாயையின் காரியமாய் உயிர்நிலைபெறுதற்கு இடனாகிய உடலினை மாயாபுரி (திருமந்திரம் 2528) என்ற தொடரால் குறித்தார் திருமூலநாயனார். இத்திருமந்திரத் தொடரை யுளங்கொண்ட மெய்கண்டார் சிவஞானபோதம் மூன்றாஞ் சூத்திரத்தில் ‘மாயாவியந்திரதணு எனக் குறித்துள்ளார்.

உடம்பையே தான் என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்த நீ, குருவின் உபதேசத்தால் உயிராகிய நின்னை உடம்பின் வேறாக அறிவுடைப் பொருள் என்று தெரிந்து கொண்டாய் என மாணவனுக்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

"உன்னை யறியதுடலை முன்நானென்றாய்

உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்” (2279)

எனவரும் திருமந்திரமாகும். இத்திருமந்திரத்தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது,

“எனதென்ற மாட்டின் எனதலா தென்னா

துனதலா துன்கைகால் யாக்கை - எனதென்றும்