பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


. பத்தியின் ஞானம் பெறப்பணித் தானந்தச்

சத்தியில் இச்சைத் தகுவோன் சற்சிடனே" (1697)

எனவரும் திருமந்திரப் பொருளையுளங்கொண்டு கூறியதாகும்.

“என்றும் மாறாதுள்ள மெய்ப்பொருளும் ஒருநிலை யில் நில்லாது மாற்றமடையும் பொய்ப்பொருள்களும் எத்தன்மையன எனச் சிந்தித்துணர்ந்து, சித்தத்தை யுருகச் செய்து, சிவபெருமானது திருவருள் உய்யும் நெறியிதுவெனக் காட்டித் துணைசெய்ய, அம்முதல்வன் கைம்மாறு கருதாது செய்துவரும் உபகாரத்தை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினாலே அதன் பயனாகிய சிவஞானம் கைவரப் பெறுதல் வேண்டி அம்முதல்வனைப் பணிந்து பேரானந்தத்தை வழங்கும் அம்முதல்வனது திருவருளிற் படிதற்குப் பெருவிருப்புடையோன் பரிபாகமுடைய நல்ல மானாக்கனாவன்” என்பது இதன்பொருள்.

சத்து சுட்டுணர்வால் அறியப்படாது சிவஞானம் ஒன்றினாலே அறிதற்குரியதாய் என்றும் மாறாதுள்ளதாகிய சிவம். அசத்து சுட்டி அறியப்படுவதாய் அழியுந்தன்மைய தாகிய உலகத்தொகுதி. சித்து - சித்தம், அம்முக்கெட்டுச் சித்து என நின்றது. உயிர்கட்கு ஞானத்தை நல்குவது தடையிலா ஞானமாகிய சிவசத்தியேயாதலின் ஞானம்பெற விழைவோன் சத்தியாகிய திருவருளைப் பெறுதற்குப் பெருவேட்கையுடையனாதல் வேண்டும் என்பார், “சத்தியில் இச்சைத் தருவோன் சற்டேனே' என்றார்.

ஆன்மா தானே எதனையும் தனித்து நின்று அறியும் அறிவுடையோன் அல்லன், ஆயினும் அறிவே இல்லாதவனும் அல்லன். தானே அறிய முயலும் அவ்வான்மாவின் அறிவு சத்துடனும் அசத்துடனும் கூடியறிவதானால் அவ்விருநிலையும் அரனாகிய சிவபெருமானது திருவருளாய் நின்று உதவிபுரிய ஆன்மாதானே அசத்தினைச் சார்ந்து அசத்தாய் அறிந்து பின் சத்தாகிய சிவத்துடன் கூடிச் சத்தாய் ஒன்றியுடனாம் என்று உணர்த்துவது,