பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உள்ள ஆன்மாக்கள். ஆன்மா தான் என்னும் ஆன்மபோதம் இல்லையாக அவனே தானாக அடங்கிநிற்கும் நிலையே உயிர்களின் சுத்தாவத்தையாகும்” எனவுணர்த்துவது,

"தானென்றவனென்றிரண் டென்பர் தத்துவம்

தானென்றவனென்றிரண் டற்ற தன்மையைத் தானென் றிரண்டுன்னார் கேவலத் தானவர் தானின்றித்தானாகத் தத்துவ சுத்தமே.” (2348)

எனவரும் திருமந்திரமாகும். இதன் நான்காமடியில் ‘தானின்றி” என்பதிலுள்ள தான்’ என்பது ஆன்ம போதத்தையும், தானாக’ என்பதிலுள்ள தான்’ என்பது முதல்வனாகிய அவனையும் குறித்து நின்றன.

ஆன்மாவாகிய தான் என்றும் முதல்வனாகிய அவன் என்றும் கூறப்படும் உண்மைப் பொருள்களுள் தான் அவன் என்னும் இரண்டினையும் ஆன்மாவாகிய தனக்குள்ளே கண்டு தான் என்ற சொல்லப்படும் ஆன்மாவாகிய பூவை முதல்வனாகிய அவனது திருவடியிற் சாத்தினால் அவ்வான்மா இரண்டறச் சிவத்துடன் கூடி ஒன்றாவதல்லது அந்நிலையில் நான் என்றும் அவனென்றும் பிரித்துனர முற்படுதல் வீடுபேறாகிய நற்பயனைத் தராது என அறிவுறுத்துவது,

$

"தானென்றவனென் றிரண்டாகுந்தத்துவம்

நானென்றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென்றவனென்கைநல்லதொன்றன்றே” (1807)

எனவரும் திருமந்திரம் ஆகும்.

"அவனே தானே ஆகிய அந்நெறி

ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே”

எனவரும் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரமாகும். “உயிர்க்குயிராகிய இறைவன், ஆன்மாக்கள் பாசப் பிணிப்புட்பட்ட கட்டுநிலையில் தான் என வேறு