பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சேர்ந்து ஒன்றாகிய உப்பு, ஆன்மா மலம் நசித்து இறைவன் கழலில் ஒன்றுபடுதல் மாத்திரைக்கு உவமையாயிற்று. மலம் நசித்தலாவது ஆணவமலம் தனது மறைத்தற்சத்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையே பிறிதன்று என்பது,

“பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கொடுங்கிப்

போயகலத் தன்வாளேயெங்குமாந்தன்மைபோ ను”

(சிவ. சூ. 11 அதி. 2 வெண்பா 73)

என்னும் உவமையாற் புலனாம். இருபொருள் ஒன்றாய்க் கலந்து ஒன்றினுள் ஒன்று அடங்கி இரண்டுங்கெடாது ஒன்றாய்த் தோன்றுதற்கு அப்பணைந்த (நீரொடுகலந்த) உப்பு உவமை. பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களும் வியாபக வியாப்பியங்களாய் (விரிவும் விரிவின் அடங்கியனவுமாய்) நிற்கும் முறைமைக்குத் தண்கடல் நீர் உப்புப் போல்’ என உவமை கூறுவர் மெய்கண்டார். உப்பானது தண்ணீரொடு கலத்தலன்றிக் கடலாகிய வெளியுடன் விரவாமைபோலப் பாசமும் ஆன்மாவாகிய பசுவைச் சார்தலன்றிக் கடவுளாகிய பதியைச் சார்தல் இல்லையென்பது இவ்வுவமையாற் புலனாகும். அறிவிற் சிறந்தோரும் அறிவற்று அயர்வோரும் ஆகிய இவர்கட்கு அன்றி, அறிவும் அறியாமையும் ஒருங்கு ைடயார்க்குப் பயன்படும் நோக்கத்துடனேயே ஆசிரியர்கள் அறிவுநூல்களை அறிவுறுத்தியருள்வர் என்பது,

"அறிவிக்க வேண்டாம் அறிவற் றயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற்றறியாமை யெய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்மறி வாரறி வோரே” (2327)

எனவரும் திருமந்திரமாகும். இத்திருமந்திரப் பொருளை அடியொற்றியமைந்தது,

'போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே

பொருந்தினோர் இவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல ஏதுநெறி எனும்அவர்கட் கறிய முன்னாள் இறைவன் அருள் நந்திதனக்கியம்ப”

(சித்தியார், ப்ரபக்கம்.10)