பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"இரவும் பகலுமிலாத விடத்தே

குரவஞ் செய்கின்ற குழலியை நாடி அரவஞ் செய்யாதவளோடுஞ்சந்திக்கிற் பரவஞ் செயளவகைப்பாலனு மாமே” (1134)

“நின்றவச் சாக்கிரந்துளியம தானால்

மன்றனும் அங்கே மணஞ்செயா நின்றிடும் மன்றன் மணஞ்செயின் மாயையும் மாய்ந்திடும் அன்றே யிவனும் அவனென லாமே” (2227)

என்னுந் திருமந்திரப் பாடல்களை அவ்வுரையாசிரியர் எடுத்துக் காட்டுவர். மேலான நிட்டையினைப் பெறுதற்குப் பக்குவமுடையவர்கள் ஆசாரியனிடத்திலே உண்மையைப் பெற்று அநுபவத்தில் அறிகிறதொழிய வெறும் நூலறிவி னாலே அறிதல் இயலாது என்பதற்கு,

£& - - - - - -

காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டுங் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தின் அதற்கறந் தற்றே” (2937) என்னுந் திருமந்திரத்தை மேற்கோளாகக் காட்டுவர் மதுரைச் சிவப்பிரகாசர்.

தத்துவங்களும் ஆன்மாவும் தம்மிற் கூடிச் சீவிக்கும் முறைமையும், அவ்வாறு சீவிக்கும் பொழுதே அவை யிரண்டும் பகல் விளக்குப்போலே தற்போதம் மழுங்கி நிற்க அருளொளி மேலிட்ட நிலையில் ஆன்மா அவ்வருளோடுங் கூடிச் சிவாநுபவத்தைப் பெறும் முறைமையும் அறிவுறுத்துவது,

so

பற்றிடுங்கருவி யாவும்படர்ந்துணர் வளிக்குங்காலை உற்றறிந்திடுவதொன்றின் உணர்வினின் உண்மையாகும் மற்றது. பகல்விளக்கின் மாய்ந்திட வருவதுண்டேல் பெற்றிடும் அதனை மாயப் பிறப்பினை யறுக்கலாமே.”

எனவரும் சிவப்பிரகாசமாகும். பகல்விளக்குப்போல் என்ற து ஆன்மா தற்போதம் கெட்டு நிற்றல். இதற்குப் பிரமாணம்