பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

707


திருவாசகத்தில்,

"வான்கெட்டு மாருதமாய்ந்தழல்நீர் மண்கெடினுந் தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென்னுள்ளமும்

போய் நான்கெட்டவா பாடித்தெள்ளேனங்கெட்டாமோ”

எனவும், திருமந்திரத்தில்

“ஒத்திட்டிருக்க வுடம்போடுயிர்தான்

செத்திட்டிருப்பர் சில சிவயோகிகள்” (121)

எனவும் கண்டு கொள்க என்பர் மதுரைச் சிவப்பிரகாசர்.

புலன்களையடக்கித் தவநெறியில் நின்று எல்லாட் பொருள்களும் ஒடுங்குதற்கு நிலைக்களமாகிய ஞேயத்தில் (பரம்பொருளில்) ஒன்றி நிற்போர் அடையும் பயன்களை புணர்த்துவது,

“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவதில்லை நமனுமங்கில்லை இடும்பையு மில்லை இராப்பக லில்லை படும் பயனில்லை பற்றுவிட் டோர்க்கே’ (1624)

எனவரும் திருமந்திரமாகும். "எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்குக் காரணமான சிவபரம் பொருளினிடத்தே ஒன்றி நிலைபெற்ற தவச்செல்வர்களாகிய பெருமக்களது உள்ளமானது உலகில் நேரும் இடையூறுகளையெண்ணித் துளக்கமுறுவதில்லை. அந்நிலையில் அங்குக் கூற்றுவனும் அணுகுவதில்லை. துன்பமும் இல்லை, இரவு (மறப்பு) பகல் (நினைப்பு) என்ற வேற்றுமையில்லை, யான் எனது என்னும் இருவகைப்) பற்றுக்களை விட்டொழித்தோராகிய அவர்கட்கு (இவ்வுலகிற் பிறரால் அடையவேண்டிய பயன் எதுவும் இல்லை. (எனவே ஒன்றாலுங் குறைவின்றிப் பேரின்ட நிலையில் வாழ்வார்கள்) என்பது இதனால் உணர்த்தப்படும் பொருளாகும்.