பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்

எஞ்ஞான்றும் எப்பொருளு மாவதெனக்கு” (அற்புதத். 9)

என இறைவனோடு பிணிப்பின்றியுள்ள திருவருட்சத்தியே உலகுயிர்களை இயக்கி நிற்குந் திறத்தினை விரித்துரைத்தார்.

அவனருளே கண்ணாகக் கொண்டு தன்னைச் சிந்தித்துக் காண வல்ல தவச்செல்வர்களுக்கு அவர்களது உள்ளத்துள்ளே டேரொளிப் பிழம்பாகத் தோன்றி யருள்புரிதல் அருளாளனாகிய இறைவனது இயல்பாகும். அப்பெருமானைப் புறத்தே கண்டு மகிழ வேண்டுமென விரும்புவார்க்கும் அவர்கள் விரும்பிய வண்ணமே எதிர் தோன்றிக் காட்சியளிக்கவல்ல எளிமைத் தன்மைவாய்ந்த அருளாளன் அவன். அவனைக் கைதொழுது போற்றும் மெய்யடியார்களுக்கு அவனது திருவுருவத்தைக் காணுதல் இயலும் என்பது அம்மையாரது உள்ளத்துணிபாகும்.

“அறியும் இயல்புடைய ஆன்மாவேயாய் ஒற்றித்து நிற்பவனும் இறைவனாகிய அவனே. அங்ங்ணம் உயிர்களோடு வேறறக் கலந்து நிற்பினும் உயிர்களாகிய அவற்றின் தன்மை தன்னைப் பற்றாதவாறு தான் அவற்றின் வேறாக நின்று அவ்வுயிர்களுக்குப் பொருளின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தருள்பவனும் அவனே. கண்களுக்குப் பொருள் களின் இயல்பினை உள்ளவாறு காட்டித் தானும் உடனிருந்து காணும் உயிரைப்போன்று, உயிர்களுக்குப் பொருளின் இயல்பினை உள்ளவாறு அறிவுறுத்தி அவற்றோடு பிரிப்பின்றி உயிர்க்குயிராய் உடனிருந்து அறிந்து உதவிசெய்பவனும் அவனே. எல்லாவற்றையும் இருந்தாங்கு அறிகின்ற மெய்யுணர்வே திருமேனியாகக் கொண்டு விளங்குபவனும் அவனே. விரிந்து ஒளிதரும் சுடர்ப்பொருள் களும் நிலனும் வானும் ஆகிய உலகப்பொருள்கள் எல்லா வற்றோடும் கலந்து நின்று உலகத்தை இயக்கி நிற்பவனும் அம்முதல்வனே என உலகுயிர்களோடு இறைவனுக்குள்ள அத்துவிதத் தொடர்பினை விளக்குவது,